எட்கார் ஜிமெனெஸ் லுகோ என்ற மேற்படி சிறுவன் மெக்ஸிக்கோ போதைவஸ்து கடத்தல் குழுவினரிடம் பணத்தைப் பெற்று எதிராளிக் குழுவைச் சேர்ந்தவர்களை தலையை வெட்டி படுகொலை செய்துவந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
எல் பொன்சிஸ் என்ற புனைப்பெயரைக் கொண்ட எட்கார் ஜிமெனெஸ், தனது 12 ஆவது வயதிலேயே பணத்துக்காக படுகொலை செய்யும் நடவடிக்கையில் களம் இறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட எட்கார் ஜிமெனெஸ் அளித்த பேட்டியில், தான் 4 படுகொலைகளில் பங்கேற்றதாகவும் போதைமருந்து ஏற்றப்பட்டு அச்சுறுத்தப்பட்ட நிலையிலேயே அவற்றைச் செய்ததாகவும் கூறினான்.
““நான் இப்படுகொலைகளைச் செய்வது தவறானது என உணர்ந்தேன். எனினும், நான் அவற்றைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டேன்.
நான் அவற்றைச் செய்யாவிட்டால் என்னைக் கொன்றுவிடுவதாக அவர்கள் அச்சுறுத்தினர்'' என்று கூறிய எட்கார் ஜிமெனெஸ், ““நான் தலையை வெட்டியே படுகொலைகளைச் செய்தேன். பாலங்களில் தூக்கிலிட்டு ஆட் களைக் கொல்லும் நடவடிக்கைகளில் ஒரு போதும் ஈடுபடவில்லை'' என்று தெரிவித்தான்.
எட்கார் “ஜிமெனெஸ்' தனது 16 வயது சகோதரி உள்ளடங்கலாக பெண்களைக் கொண்ட குழுவொன்றுடன் பணியாற்றியுள்ளார்.
அவனது 16 வயது சகோதரியும் கைது செய்யப்பட்டுள்ளாள்.
குயனவாகா நகலிருந்து அமெரிக்காவுக்கு தனது இரு சகோதகரிளுடன் விமானத்தில் புறப்பட்ட வேளையிலேயே எட்கார் ஜிமெனெஸ் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவன் மெக்ஸிக்கோ நகருக்கு வெளியே மெரேலொஸ் மாநிலத்தில் செயற்பட்டு வரும் தென் பசுபிக் பிராந்திய போதைவஸ்து குழுவினருக்காக பணியாற்றிவந்ததாக கூறப்படுகிறது.
ஆசியபசுபிக் போதைவஸ்துக் குழுவானது மெக்ஸிக்கோ படையினரால் ஒரு வருடத்திற்கு முன் கொல்லப்பட்ட போதைவஸ்து கடத்தல் மன்னரான அர்துரோ பெல்ட்ரான் லெய்வா தலைமையிலான குழுவினரால் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
மெக்ஸிக்கோ ஜனாதிபதி பிலிப்பே கால் டெரோன் 2006 ஆம் ஆண்டில் அந்நாட்டு போதைவஸ்து குழுக்களுக்கு எதிரான போராட்டத்தில் படையினரை ஈடுபடுத்தியதையடுத்து, அந்நாட்டில் போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புடைய வன்றைகளில் 28,000 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.











கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக