திங்கள், 6 டிசம்பர், 2010

விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹொலிலிவுட் நடிகர்

அமெரிக்க ஹொலிலிவுட் நடிகர் ஜோஷ் துமல். இவர் டிரான்ஸ்பார்மர்ஸ் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இவர் பிளாக் ஐடு பீஸ் படத்தில் நடித்த நடிகை பெர்ஜியை திருமணம் செய்து கொண்டவர் ஆவார். இவர் நியுயார்க்கில் இருந்து கென்டக்கி நகருக்கு செல்வதற்காக விமானத்தில் ஏறினார். ஏறியது முதல் செல்போனில் தன் மனைவியுடன் பேசியபடி இருந்தார்.

விமானப்பணி பெண்கள் அவரை செல்போனை அணைக்கும்படி கேட்டுக்கொண்டனர். திரும்ப திரும்ப கேட்டுக்கொண்ட போதும் அவர் தொடர்ந்து போனில் பேசியபடி இருந்தார். இதை பார்த்த விமானப் பணிப்பெண் விமானியிடம் தெரிவித்தார். உடனே விமானி ஓடுபாதையில் ஓடிக் கொண்டு இருந்த விமானத்தை திரும்பவும் விமான கேட்டுக்கு கொண்டு வந்தார். நடிகர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார். அதன் பிறகு விமானம் தன் பயணத்தை தொடர்ந்தது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல