திங்கள், 6 டிசம்பர், 2010

நாயை திருமணம் செய்த இளைஞன் (படங்கள் இணைப்பு)

20 வயது இளைஞர் ஒருவர் தனது செல்லப் பிராணியான 5 வயதான நாயை திருமணம் செய்த விசித்திர சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.

ஜோசப் குயிஸோ என்ற மேற்படி இளைஞர், குயீன்ஸ்லாண்ட் மாநிலத்தில் ரூவூம்பா நகரிலுள்ள பொது பூங்காவில் ஹனி என்ற தனது பெண் நாயை முறைப்படி திருமணம் செய்துள்ளார்.

இத்திருமணத்தில் சுமார் 30 நண்பர்களும் உறவினர்களும் கலந்துகொண்டனர்.

இத் திருமணம் தொடர்பில் ஜோசப் குயிஸோ விபரிக்கையில், “நான் ஹனியிடம் (நாயிடம்) நாம் திருமணம் செய்வோமோ என்று கேட்டேன். ஆனால், அது எதுவித பதிலையும் அளிக்கவில்லை. அதனால், மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என நினைத்து இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்தேன்'' என நகைச்சுவையாகக் கூறினார்.

திருமணத்தின் போது ஜோசப் குயிஸோ குனிந்து ஹனியின் முன்னங்கால்களை தூக்கிப் பிடித்தபடி, “நீ எனது மிகச் சிறந்த நண்பன். நீ எனது நாளின் ஒவ்வொரு பகுதியையும் சிறப்படையச் செய்து வருகிறாய்'' என்று கூறினார்.

“இந்த திருமணம் முற்றுமுழுதாக வேடிக்கையான ஒன்று மட்டுமேயாகும். இது நானும் எனது நண்பர்களும் ஒன்று கூடுவதற்கான ஒரு நிகழ்ச்சியாக அமைகிறது. நாங்கள் ஒரு திருமணத்தை நடத்தியிருக்கிறோம். ஆனால், அது உண்மையான ஒன்றாக அமையடியாது'' என்று கூறிய ஜோசப் குயிஸோ, தனக்கும் நாய்க்கும் இடையிலான உறவு தூய நட்புரீதியானது எனவும் தம்மிடையே பாலியல் ரீதியாக எதுவித உறவும் இல்லை எனவும் வலியுறுத்தினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல