நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்த சந்திரபாபு, நாகேஷ் ஆகியோரையே மிஞ்சி ஊதியம் வாங்குவதிலும் சாதனை படைத்த கவுண்டமணியின் சொந்த ஊர் உடுமலைப் பேட்டை. விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு சிறு வயதிலேயே நடிக்க வேண்டும் என்ற வெறியிருந்தது.
எனவே தனது 12 ஆவது வயதிலேயே நாடக கம்பனியில் சேர்ந்தார். “போய்ஸ்' கம்பெனி முதல் ஜோதி நாடக சபா வரை எல்லாவற்றிலும் நடித்த இவருக்கு கூச்சம், பயம், எல்லாம் போய் நம்மாலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.
இதனால் பாரதிராஜா, “16 வயதினிலே' என்ற படத்தினை இயக்க தொடங்கிய போது ஏற்கனவே கவுண்டமணியை நாடகமொன்றில் பார்த்திருந்தமையினால் ரஜினியுடன் “ஆமாம்' போடும் சிறிய வேடத்திற்கு இவரை தெரிவு செய்தார். சிறிய வேடமாக இருந்தாலும் அதில் தன் முழுத் திறமையை காட்டி கை தட்டல் வாங்கினார்.
ஆரம்பத்தில் சிறிய வேடங்களே அதிகமாக கிடைத்தாலும் அவற்றிலும் தனக்குப் பிடித்ததை மட்டுமே எடுத்து நடித்தார்.
“மலையூர் மம்பட்டியான்' என்ற படத்தில் அறிகமான “செந்திலுடன்' இணைந்து நடிக்கக் கூடிய சந்தர்ப்பம் கவுண்டமணிக்கு கிடைத்த போது இருவரினதும் கூட்டு மற்ற நகைச்சுவை நடிகர்களின் வாய்ப்புகளுக் கெல்லாம் வேட்டு வைத்தது.
“நான் பாடும் பாடல்', “உதய கீதம்', “வைதேகி காத்திருந்தாள்' என்று தொடங்கிய கவுண்டமணியின் அதிரடி ஆட்டம், கரகாட்டக்காரனின் மெகா வெற்றியினால் உச்சத்துக்குப் போனது. ஒரு படத்துக்கு இவ்வளவு என்று சம்பள வாங்கியவர் ஒரு கால்ஷீட்டுக்கு இவ்வளவு என வாங்கினார்.
மிகப் பெரிய இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர நடிகர்கள் கூட இவரின் திகதிகளுக்காக காத்துக் கிடந்தனர். ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், ராமராஜன், கார்த்திக் என அன்றைய முன்னணி நடிகர்கள் அனைவருமே இவரின் திகதிக்காக காத்திருந்தனர்.
“என் ராசாவின் மனசிலே' படத்தின் மூலம் அறிகமான “வடிவேலு' இவருடன் சேர்ந்து கமலஹாசன் கதாநாயகனாக நடித்த ஆர். வி.
உதயகுமான் “சிங்கார வேலன்' படத்தில் நடித்த போதும் கவுண்டரின் அட்டகாசமான நடிப்பினால் வடிவேலுவால் கூட எடுபட முடியவில்லை.
இவர் அர்ஜுனுடன் இணைந்து நடித்த கர்ணா, ஜென்டில்மேன் உட்பட பல படங்கள் மிகப் பெய வெற்றிப் பெற கவுண்டமணியும் ஒரு காரணம் என்ற பரபரப்பான செய்தி அன்றே பரவியது.
அதை மெய்ப்பிக்கும் வண்ணம் சத்யராஜுடன் இணைந்து இவர் நடித்த மாமன் மகள், நடிகர் விஜயகாந்துடன் நடித்த சின்ன கவுண்டர், கார்த்திக்குடன் உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, மேட்டுக்குடி, பிரபுவுடன் நினைவுச் சின்னம், தேடினேன் வந்தது, மிஸ்டர் மெட்ராஸ், ராம ராஜனுடன் எங்க ஊர் பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உட்பட பல படங்கள் மிகப் பெரிய வெற்றியை ஈட்டின. கவுண்டமணியுடன் செந்தில் இணைந்து நடித்தால் அந்தப் படத்தின் வெற்றி உறுதியென்ற நிலைமை உருவாகிய போது கவுண்ட மணியினால் செந்திலின் மார்க்கெட்டும் உயர்ந்தது.
அதிலும் கரகாட்டக்காரனில் இடம் பெற்ற வாழைப்பழ ஜோக் அந்தப் படத்தை மிகப் பெய வசூலுடன் ஒரு வருடம் ஓடச் செய்து ராமராஜனையும் உயரத் துக்கு கொண்டுபோனது.
செந்திலை பல பாஷைகளில் திட்டி அடித்து, உதைத்து கவுண்டமணி நடிப்பது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
செந்திலின் ப்ளஸ் பொயிண்ட் அவரின் உடல் அமைப்பாகும். எதை சொன்னாலும் புரியாததைப் போல அப்பாவியாக நிற்பதனால் ஒரு மாறுதலுக்காக அவரை இவர் கலர் கம்பித் தலையா, அடுப்புச் சட்டித் தலையா, அரிசி மூட்டைக்கு அண்டர்வெயார் போட்ட மாதிரி வாரான பாரு என்றெல்லாம் பேசும் போது ரசிகர்கள் அதை கைத்தட்டி ரசித்தார்கள்.
கே. எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் மெகா ஹிட்டான நாட்டாமையில் செந்திலின் மகனாக கவுண்டமணி வருவார். ஆனாலும் இங்கேயும் கவுண்டமணியின் லொள்ளுக்கு குறைவேயில்லை.
அதேபோல் ஒரு அரசியல் வாதியின் அட்டகாசங்களை மிக ஆளுமையாக நகைச்சுவையுடன் சூரியன் படத்தில் நடித்திருக்கிறார்.
இணைப்பேயில்லாத தொலைபேசியில் இறுமாப்பாக பேசி விட்டு விஷயம் வெளிப்பட்டதும் மிக சகஜமாக பதற்றப்படாமல் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என அதிரடியாக பேசுவது நிச்சயமாக கவுண்டரால் மட்டும்தான் டியும்.
சுந்தர் சிக்கு மிகப் பெரிய வெற்றியினை அளித்த “உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் கதாநாயகன் கார்த்திக்குக்கு இணையாக நகைச்சுவையில் பட்டையை கிளப்பிய கவுண்டமணிக்காக அந்தப் படத்தை எத்தனை றை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
நகைச்சுவை வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த கவுண்டமணி முதன் முறையாக பணம் பத்தும் செய்யும் படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
அந்தப் படத்தின் வெற்றி இவரை பிறந்தேன் வளர்ந்தேன் என இன்னும் சில படங்களில் கதாநாயகன் வேடமேற்று நடிக்க தூண்டினாலும் அவை வெற்றியளிக்கவில்லை.
கவுண்டமணி சினிமாவுக்கு அப்பால் அவரின் பிரத்தியேக வாழ்வில் வித்தியாசமானவர் இவரின் நிஜ வாழ்க்கையைப் பற்றி யாரிடமும் கூற மாட்டார். “கலை நிகழ்ச்சி' என்ற பெயரில் வெளிநாடுகளுக்குப் போகமாட் டார்.
ரசிகர் மன்றங்கள் இல்லை. தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்க மாட்டார். பிறந்த நாள் கூட கொண்டாட மாட்டார். அவரின் குடும்பத்தை யாரும் படமெடுக்க அனுமதிக்க மாட்டார். இவரின் திரைப்படங்கள் படப்பிடிப்பு நடக்கும் தளத்துக்குக் கூட இவருடைய குடும்பத்தினர் யாரும் வந்ததில்லை.
இரண்டு பெண்களும் மண முடித்து விட்டு தாத்தாவாகிவிட்ட நிலையிலும் இவர் மேக் அப் இல்லாமல் வெளியே வரமாட்டார்.
கவுண்டமணி நடித்த திரைப்படங்களை எடுத்து நோக்கும் போது ஒரு விடயத்தை தெரிந்து கொள்ளலாம். அவர் சமூகத்தின் உயர்வுக்காகவோ அல்லது அதன் எழுச்சிக்காகவோ எந்தக் கருத்தையும் தன் படங்களில் சொல்வதில்லை.
அவரின் ஒரே குறிக்கோள் தன்னுடைய படத்தை அல்லது தான் பங்குபற்றிய பங்களிப்பினை வழங்கிய படத்தை பார்க்க வருபவர்கள் கவலைகளை மறந்து வாய்விட்டு சிரிக்க வேண்டும்.
நல்லதோ கெட்டதோ கவுண்டரின் நகைச் சுவையினை மக்கள் ரசிக்க வேண்டும்.
சிரிக்க வேண்டுமென்பதே இவன் குறிக்கோளாக இருந்தது.
மேலும் இவரால் தயாப்பாளர்கள் இலாபம் சம்பாதிக்க வேண்டும். நஷ்டமடையக் கூடாது. இன்று பட வாய்ப்பின்றி வீட்டிலிருந்தாலும் மகிழ்ச்சியுடனேயே இருக்கிறார்.
கவுண்டமணியைப் போலவே வடிவேலு இன்று கொடிகட்டிப் பறக்கிறார்.
மணித்தியாலயத்துக்கு இவ்வளவு என பேரம் பேசி பிஸியாக நடித்து வரும் வடிவேலு கூட கவுண்டமணியின் பாணியைத் தான் பின்பற்றி வருகின்றார்.
கவுண்டர் செந்திலுடன் கூட்டாக சேர்ந்து சிரிக்க வைத்தார். வடிவேலு பல பேரை கூட்டணி சேர்த்து சிரிக்க வைக்கிறார். வழிகள் வேறாக இருந்தாலும் நடிப்புப் பாணி ஒன்றாகத்தானிருக்கிறது.
என்றாலும் “கவுண்டமணி'யின் நகைச்சுவைக்கு என்றுமே அழிவில்லையென்பது தான் உண்மை.
அன்றைய நட்சத்திர நடிகர்களையே கதிகலங்க வைத்த கவுண்டமணி உண்மையி லேயே ஒரு வித்தியாசமான நகைச்சுவை நடிகர்தான்.
பாலா. சங்குபிள்ளை



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக