திங்கள், 6 டிசம்பர், 2010

இறைநிந்தனை செய்த பெண்ணை கொல்பவர்களுக்கு 5 இலட்சம் ரூபா சன்மானம்

இறைநிந்தனை குற்றச்சாட்டில் அண்மையில் நீதிமன்றமொன்றால் மரணதண்டனை விதிப்புக்குள்ளாகியுள்ள பாகிஸ்தானிய கிறிஸ்தவ பெண்ணான ஆஸியா பீபீயை படுகொலை செய்பவர்களுக்கு 5 இலட்சம் ரூபாவை சன்மானமாக வழங்குவதாக அந்நாட்டு ஸ்லிம் மதகுரு ஒருவர் அறிவிப்பு செய்துள்ளார்.

கைபர் பக்துன்கவா மாகாணத்திலுள்ள பிரபல மொஹபாத் கான் பள்ளிவாசலின் இமாமான மௌலானா யூஸுப் குரோஷியே இந்த அறிவிப்பை செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயாரான ஆஸியா பீபீ, முஸ்லிம் பெண்கள் குழுவினருடனான தகராரொன்றின் போது இறைநிந்தனை செய்யக் கூடிய வகையில் வார்த்தைகளைக் கூறியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

எனினும் ஆயிஸா பீபீ தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆயிஸா பீபீ யின் கணவர் தனது மனைவிக்கு வழங்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிராக லாகூர் உயர்நீதிமன்றத்தில் மேன்றையீடு செய்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல