சனி, 28 பிப்ரவரி, 2015

நடிகை சோனம் கபூருக்கு பன்றிக் காய்ச்சல்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

நடிகை சோனம் கபூருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியுள்ளது. இதையடுத்து அவரை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

யானைகளை வெட்டி... சிங்கக்கறி விருந்தளித்து... 91வது பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாடிய முகாபே!

 Living in luxury: Mugabe addressed thousands of loyal supporters at the $1million party at the lavish resort town of Victoria Falls

ஜிம்பாப்வேயில் 35 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிபர் ராபர்ட் முகாபேயின் 91வது பிறந்தநாள் யானைகள் வெட்டி, சிங்கக்கறி விருந்துடன் ஆடம்பரமாகக் கொண்டாடப் பட்டுள்ளது. கடந்த 1980ம் ஆண்டு முதல் தொடர்ந்து 35 ஆண்டுகளாக ஜிம்பாப்வேயில் அதிபராக இருந்து வருகிறார்

ஒபாமா எந்த மதம்?- ஆய்வால் அமெரிக்க அரசியலில் சலசலப்பு !

அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றபோது, பைபிள் மீது உறுதியெடுத்துக்கொண்டு, பதவிப் பிரமானம் செய்து கொண்டார். | கோப்புப் படம்: ஏ.பி.

அமெரிக்க அதிபர் ஒபாமா எந்த மதத்தைச் சேர்ந்தவர்? என்று கேள்வியை எழுப்பிய ஆய்வின் முடிவால் அமெரிக்க அரசியலில் பெரும் சலசலப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் வெளிவந்த செய்தியின் விவரம்:

இசையின் படுதோல்வி - சுப்பர் சிங்கர் ஜுனியர் தொடர் நாலாவதின் முடிவுகள்

கடந்த சில வருடங்களாக விஜய் ரி.வியின் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியினை தவறாது பார்த்து வருகின்றேன். இந்த வருடத்து சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்தான் (2014-2015) இசை தோற்றுப் போனதையிட்டு மிகவும் மனவருத்தம் அடைகின்றேன். மிகச்சிறந்த பாடகர்கள், இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதிலிருந்து, முதல் மூன்று இடங்களுக்கு வருவதுவரை, மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது. யசிக்காவிற்கு ஒரு கோடிக்கு மேற்பட்ட வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் யசிக்காவிற்கு முதலிடம் வழங்காமல் விஜய் ரி.வி மோசடி செய்து விட்டதாகவும் இலங்கைத்தமிழர்சார் இணையங்கள் பிரச்சாரம் செய்து வருவது இன்னமும் வேதனையை அதிகரிக்க செய்துள்ளது.

ஒரு திருநங்கையின் திறந்த மடல்

 - லிவிங் ஸ்மைல் வித்யா

தங்களின் ஐ(ய்யே) காவியம் கண்டேன். விக்ரம் போன்ற வித்தியாச நடிப்பு வெறி கொண்டவர்களும், ஆஸ்கர் ரவிச்சந்திரன் போன்ற தயாரிப்பாளர்களின் பணவெறிக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களின், ரசிக மனோபாவத்திற்குப் பின்னுள்ள பெண்களின் மீதான பாலியல் வெறிகளுக்கும், ஹீரோயிசம் எனும் பொறுக்கித்தனங்களுக்கும், நாயக வழிபாட்டிற்கெல்லாம் தஞ்சம் தரும் ஆலயம், “a shankar film” தான் என்பதை அறியாதார் யார்?!

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

வசதியாகத் தான் இருக்கிறது மகனே… நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.

பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதற நான் எனது கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது !

புதன், 25 பிப்ரவரி, 2015

உங்களுடைய கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை MOBILE போனுக்கு WIFI- மூலம் பகிர்வது எப்படி?

உங்களுடைய லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை வேறு ஒரு டிவைஸ்க்கு(Mobile Phone Or Tablet Or Any Wifi Device) WIFI- மூலம் எப்படி பகிர்வது?

1. முதலில் START பட்டனை கிளிக் செய்து Search செல்லவும் பின்பு cmd என்று டைப் செய்து Left கிளிக் செய்து Run As Administrator அழுத்தவும் ….

2. அதன் பிறகு Command பாக்ஸ்சில் உங்களுடைய கணினி அல்லது லேப்டாப்பில் Wifi டிரைவர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள … கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் …

சூப்பர் சிங்கர் - ஆரவாரமும் சர்ச்சையும்

மேதகு மறத் தமிழ் உணர்வாளர்களே! நாக்கைப் பிடுங்கிற மாதிரி ஒரு நாலைந்து கேள்வி!

சுப்பர் சிங்கர் போட்டியில் ‘விஜய் டிவி துரோகம் இழைத்து விட்டது, 37 நாடுகள் சதி செய்து விட்டன, திட்டமிட்ட இன அழிப்பு நடந்து விட்டது’ மாதிரி நடக்கும் திருக்கூத்துக்களைக் கண்டு, எரிச்சல் தாளவில்லை. ஈழத்தை விற்றாரா? வாங்கினாரா? பிச்சை கேட்டாரா? என்று விவாதம் வேறு நடக்கிறது.

இந்த வாய்வீச்சு வீரர்களுடன் நேரத்தை வீணாக்காமல் வாயை மூடி மெளன விரதம் மேற்கொள்வதாகத் தீர்மானித்தாலும், இந்த முகப்புத்தக மாவீரர்களின் துன்பம் தாங்க முடியவில்லை. கேட்பவன் கேனயன் என்ற நினைப்பில் நடுறோட்டில் பிளேன் விடும் இவர்களிடம், நாக்கைப் பிடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்காவிட்டால், மனிதர் இங்கே நிம்மதியாக இருக்க முடியாது போலிருக்கிறது.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

உங்களது தனிப்பட்ட தகவல்களை கூகுள் வைத்திருப்பது உங்களுக்கு தெரியுமா

துவக்கத்தில் இன்டர்நெட்டில் இருக்கும் பக்கங்களை இன்டக்ஸ் செய்து வந்த கூகுள் நிறுவனம், இன்று உலகையே நம் கண் முன் கொண்டு வந்திருக்கின்றது, டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்களை தயரித்து வருவதோடு பல ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றது. இன்று கூகுள் நிறுவனம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை எப்படி சேகரிக்கின்றது என்றும் அவற்றை நீங்கள் எப்படி அழிக்க வேண்டும் என்பதையும் பாருங்கள்..

கோத்தா முகாம் தொடர்பில் வெளி­யா­கி­யுள்ள தகவல்

நாட்டில் இறுதி யுத்­தத்­தின்­போதும் அதன் பின்­னரும் கடத்­தப்­பட்­ட­வர்கள், காணாமல் போன­வர்­களின் நிலை தொடர்பில் அறிய முடி­யாது அவர்­க­ளது உற­வி­னர்கள் தொடர்ந்தும் தவித்து வரு­கின்­றனர். காணா­மல்­போன தமது உற­வுகள் மீளவும் திரும்பி வரு­வார்கள் என்ற நம்­பிக்­கையில் அந்த மக்கள் நாள்­தோறும் கண்­ணீ­ருடன் வாழ்­நாளை கழித்து வரு­கின்­றனர்.

மனித முகத்துடன் பிறந்த அதிசய பன்றிக்குட்டி

மனித முகத்­தை­யொத்த முகத்­தையும் நெற்­றியில் பிறப்­பு­றுப்­பையும் கொண்ட விநோத பன்றிக் குட்­டி­யொன்று தென் சீனாவில் பிறந்­துள்­ளது.

மேற்­படி பன்­றிக்­குட்­டியை அத­னது தாய் நிரா­க­ரித்­ததால் அது பிறந்து சிறிது நேரத்தில் உயி­ரி­ழந்­துள்­ளது.

பலரும் அறிந்திராத தைராய்டு பிரச்சனைகள் குறித்த உண்மைகள்!

உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் எனப்படும் என்டோக்ரைன் (Endocrine System) சுரப்பியிலேயே பெரிய சுரப்பி தைராய்டு தான்.இது நமது கழுத்தின் கீழ் பகுதியில் உள்ளது. இதனுள் தைராக்ஸின் மற்றும் ட்ரியோடோதைரோனைன் எனப்படும் இரண்டு முக்கிய ஹார்மோன்கள் இருக்கின்றன. இதை மருத்துவ பெயரில் T3 & T4 என குறிப்பிடுகின்றனர்.

சனி, 21 பிப்ரவரி, 2015

ஏர்டெல் சூப்பர் சிங்கர் 4 - தமிழக, ஈழ ஆதரவற்ற குழந்தைகளுக்கு தங்கத்தை தாரைவார்த்து கொடுத்த ஜெசிக்கா!

சென்னை: தமிழகத்தின் செல்லக் குரல்களுக்களுக்கான தேடல் என்று விஜய் டிவி ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்ற "ஏர்டெல் சூப்பர் சிங்கர் 4" நிகழ்ச்சியில் இரண்டாவது இடம் பிடித்தவர் கனடாவாழ் ஈழச்சிறுமியான ஜெசிகா. ஆனால் தான் பரிசாக பெற்ற 1 கிலோ தங்கத்தையும் தமிழகம் மற்றும் ஈழத்தில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அப்படியே தாரைவார்த்துக் கொடுத்து தமிழர் நெஞ்சில் நீங்காத முதலிடத்தைப் பெற்றுவிட்டார்.. கனடா வாழ் ஈழத் தமிழராக இக்குழந்தையின் பாடல்களில் அரங்கம் மட்டுமல்ல, டிவி வழியாக இந்நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்த ஒவ்வொரு மனமுள்ள மனிதர்களும் கண்டிப்பாக கண்ணீர் சிந்தியிருப்பார்கள். அந்தக் குழந்தையின் உருக வைக்கும் குரலும், சோகம் கலந்த கானமும் கல்லையும் கரைய வைத்திருக்கும் என்பது உறுதி.

புதன், 18 பிப்ரவரி, 2015

கூகுள் தேடல் பட்டியலை நீக்கும் வழிகள்

நாம் தினந்தோறும் இணையத்தில் அதிக நேரம் செலவிடுகிறோம். அது பெர்சனல் கம்ப்யூட்டராகவோ அல்லது மொபைல் சாதனமாகவோ இருக்கலாம். தகவலைத் தேடிப் பெற இவற்றைப் பயன்படுத்தி இணையத்தில் உலா வருகிறோம். இதில் தகவல் தேடிப் பெற பலரின் விருப்பமாக இருப்பது கூகுள் தேடல் சாதனமே. இந்த தேடல்களில், பல நம்முடைய தனிப்பட்ட விருப்ப தேடல்கள் நிச்சயம் இருக்கலாம். இந்த தேடல்களை மற்றவர்கள் அறியக் கூடாது என விருப்பப்படுவோம். ஆனால், இவை நம் கம்ப்யூட்டரில், மொபைல் சாதனங்களில் இயக்கப்படும் கூகுள் சர்ச் இஞ்சினில் பதியப்பட்டு, அதனைப் பயன்படுத்தும் மற்றவர்கள் பார்க்கக் கிடைக்கும். இவை தனிப்பட்ட நபரின் தேடல்கள் என்றால், இவை காட்டப்படக் கூடாதே. இவற்றை சர்ச் இஞ்சினிலிருந்து நீக்கப்படும் வழிகளை நாம் தெரிந்து கொண்டால், நிச்சயம் நிம்மதியாக இருப்போம். அவற்றை இங்கு காணலாம்.

எக்ஸெல் டிப்ஸ்... அப்போதைய நேரம் பதிய.. பேஸ்ட் பட்டன்.. ஒர்க்புக் பிரிண்ட் பிரிவியூவுடன் சேவ் செய்திட

அப்போதைய நேரம் பதிய: சிலர் எக்ஸெல் புரோகிராமில் பணி செய்கையில், தாங்கள் ஈடுபடும் பல்வேறு வேலைகளில், தாங்கள் செலவழிக்கும் கால அளவை அறியத் திட்டமிடுவார்கள். அதற்கென, வேலை தொடங்கும் போது அல்லது முடிக்கும் போது, அல்லது இடைவெளியின் போது, அப்போதைய நேரத்தைப் பதிய விரும்புவார்கள். இவர்கள், நேரத்தைப் பார்த்து, அதனை டைப் செய்து எண்டர் தட்ட வேண்டியதில்லை. செல் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, Ctrl+: (: -கோலன்)என்ற கீகளை அழுத்தினால் போதும். கோலன் அமைக்க ஷிப்ட் கீ அழுத்தப்பட வேண்டும் என்பதால், இதனை Shift+Ctrl+: எனவும் கூறலாம். இந்த கீகளை அழுத்திவிட்டால், எக்ஸெல், நீங்கள் தேர்ந்தெடுத்த செல்லில், சிஸ்டத்தின் அப்போதைய நேரத்தினை அமைக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உடனே என்டர் அழுத்தி, அதனை ஏற்றுக் கொள்வதுதான்.

ப்ளக் இன் புரோகிராம்களை நீக்கி பிரவுசரைப் பாதுகாக்க

பிரவுசர்கள் திறன் குறைவாக வடிவமைக்கப்பட்ட காலத்தில், அதன் கூடுதல் செயல்பாடுகளுக்கு ப்ளக் இன் புரோகிராம்கள் தேவைப்பட்டன. ஆனால், காலப் போக்கில், வைரஸ் மற்றும் மால்வேர் அனுப்புபவர்கள், இந்த ப்ளக் இன் புரோகிராம்களில் உள்ள பிழைக் குறியீடுகளை இலக்காகக் கொண்டே செயல்பட்டனர். எனவே தான், பல பிரவுசர்கள், ப்ளக் இன் புரோகிராம்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளை, பிரவுசர்களே மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டன. ப்ளக் இன் புரோகிராம்களை அவையே நீக்கி வைத்தன. எடுத்துக் காட்டாக, யு ட்யூப், ப்ளாஷ் புரோகிராமினை அறவே தன்னிடமிருந்து நீக்கியது. வேறு சில பிரவுசர்களும் இதே போல சிலவற்றைத் தள்ளி வைத்தன.

வேர்ட் டிப்ஸ்...

டேப்பின் இடைவெளி அமைக்க: வேர்ட் ரூலர் நமக்குப் பல வழிகளில் உதவுகிறது. வழக்கமாக டேப்களை நாம் செட் செய்கிறோம். ஒவ்வொரு டேப்பிற்கும் இடையே உள்ள தூரத்தினை ரூலர் மூலம் அறிந்து கொள்கிறோம். ஆனால் ஒரு டேப் பாய்ண்ட் ரூலரின் இடது புறம் இருந்து எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அதே போல வலது புறத்திலிருந்து எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அறியலாம். இதற்கு ரூலரில் டேப் உள்ள இடத்தில் கர்சரைக் கொண்டு வைக்கவும். இப்போது இடது பக்க மவுஸ் பட்டனை அழுத்தவும். அதனை விட்டுவிடாமல் வலது பக்கம் மவுஸ் பட்டனையும் அழுத்தவும். இப்போது குறிப்பிட்ட டேப் இரு புறத்திலிருந்தும் எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்று காட்டப்படும்.

'பேஸ் புக்'கில் வலை விரித்தாள்... கரம் பிடித்தேன்... கரு கலைத்து பறந்து போனாள்! 'ஜிம்' நடத்தி வரும் வாலிபர் 'ஜம்'மென ஏமாந்த கதை

திருமணம் செய்து, மூன்று லட்சம் ரூபாய் மோசடி செய்த துடன், சமூக வலைதளங்கள் வாயிலாக ஆண்களை வீழ்த்தி வரும், ஐ.டி., பெண் ஊழியர் மீது நடவடிக்கை கோரி, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

தனியார் விடுதியில்...:

சென்னை, தி.நகரைச் சேர்ந்தவர், கார்த்திகேயன், 27; ஜிம் மாஸ்டர். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு:

ரஜினிக்கு எதிராக ஜெயலலிதாவைத் தூண்டி விடுகிறார்களா "லிங்கா விநியோகஸ்தர்கள்"?

லிங்கா விவகாரத்தை பக்கா அரசியலாக்கிவிட்டார்கள், அதன் விநியோகஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர்.
லிங்காவுக்கு நஷ்ட ஈடு கேட்பதாகக் கூறிக் கொண்டு, படம் வெளியான முதல் வாரமே படத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள். அடுத்த சில தினங்களில் சீமான், வேல் முருகன் போன்ற அரசியல்வாதிகளை அழைத்து உண்ணாவிரதமிருந்தார்கள்.

பிரபாகரனின் '1987 பேட்டி'யை மீள்பிரசுரம் செய்த ப்ரண்ட்லைன்- விற்பனை செய்ய இலங்கை அனுமதி!!

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 1987ஆம் ஆண்டு அளித்த பேட்டி மீள்பிரசுரமாகி உள்ள ப்ரண்ட்லைன் ஏட்டை விற்பனை செய்ய இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

தனது பெண்ணுறுப்பிலிருந்த பக்ரீறியா மூலம் ஆராய்ச்சிக்காக யோகர்ட் தயாரித்த அமெரிக்க விஞ்ஞானி

 Cecilia Westbrook
அமெ­ரிக்­காவைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­யொ­ருவர் தனது பெண்­ணு­றுப்­பி­லி­ருந்து எடுக்­கப்­பட்ட பக்­ரீ­றியா மூலம் யோகர்ட் தயா­ரித்து ஆராய்ச்சி மேற்­கொண்­டுள்ளார்.

விஸ்­கொன்சின் பல்­லைக்­க­ழ­கத்தில் கலா­நிதி பட்­டப்­ப­டிப்பை மேற்­கொள்ளும் சிசி­லியா வெஸ்ட்­புரூக் எனும் பெண்ணே இந்த விநோத ஆராய்ச்­சியை மேற்­கொண்டார்.

திங்கள், 16 பிப்ரவரி, 2015

Do not mess with Soviet Russia

The KGB didn't mess around.

Ever wondered why Terrorists are not kidnapping Russians?

In 1986, muslim extremists kidnapped 4 Soviet diplomats in Beirut. Kidnappers demanded Moscows support for pro syrian fighters in Lebenon.

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

வந்துவிட்டன ஓட்டுநர் இல்லாத கார்கள்

 ஓட்டுநர் இல்லா கார்
ஓட்டுநர் இல்லாத கார்கள் தெருக்களுக்கு வருவதற்கான வாய்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் நான்கு இடங்களில் தானாகவே இயங்கும் ஓட்டுநர் இல்லாத கார்கள் அல்லது தானியங்கி நாற்சக்கர வாகனங்கள் சோதனை முயற்சியாக இயக்க அனுமதிக்கப் பட்டுள்ளன.

வியாழன், 12 பிப்ரவரி, 2015

பெண்களே! பிறப்புறுப்பை துர்நாற்றமின்றி வைத்துக் கொள்ள சில அற்புதமான வழிகள்!!!

ஒவ்வொரு பெண்ணுக்கும் சுத்தமாக இருப்பது தான் பிடிக்கும். அப்படி சுத்தம் என்று வரும் போது அதில் அனைத்துமே (பிறப்புறுப்பும்) அடங்கும். மேலும் பெண்கள் எப்போதுமே தங்களின் பிறப்புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அவ்விடத்தில் துர்நாற்றம் மட்டுமின்றி, தொற்றுகளும் ஏற்பட்டு தீவிரமான பிரச்சனையை சந்திக்கக்கூடும். குறிப்பாக பெண்கள் உறவில் ஈடுபடும் போது தன் துணை முகம் சுளிக்குமாறு தன்மீது எந்த ஒரு துர்நாற்றமும் வரக்கூடாது என்று அதிக சுத்தத்தைப் பின்பற்றுவார்கள்.

உங்களுக்கு அடிக்கடி 'சுச்சூ' வருதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!!!

சிலருக்கு அவசரமாக அடிக்கடி சிறுநீர் வருவது போன்று இருக்கும். இந்த நிலையை ஒவ்வொருவரும் தங்களின் வாழ்நாளில் ஒரு கட்டத்தில் கண்டிப்பாக அனுபவிப்போம். இந்த சூழ்நிலையில் அடிவயிற்றில் எரிச்சலுடன், வலியையும் உணரக்கூடும். சரி, இந்த நிலையை எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்கிறீர்களா?

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

பாசத்துக்குரிய பங்காளி வடிவேலுவுக்கு ஒரு கடிதம்!

வடிவேலு - ஆட்சியும் வீழ்ச்சியும்...

பத்திரிகையாளர்களுடன் நெருக்கமான அன்பையும் நட்பையும் எப்போதும் வைத்திருக்கும் திரைப் பிரபலங்களில் வைகை ப்புயல் வடிவேலுவும் ஒருவர். அதுவும் "வாங்க பங்காளி " என்று அவர் அழைக்கும் அன்பில் யாரும் உருகிப் போவார்கள். அவர் படங்களை இப்போது அதிகம் பார்க்க முடியாமல் இருப்பது ரசிகர்களைபோலவே மீடியாவில் இருப்பவர்களுக்கும் பெரிய வருத்தமே.
இப்போது எலி படத்தில் அவர் நடிப்பதாக அறிவிப்பு வந்திருப்பதில் எல்லோருக்கும் மகிழ்ச்சியே.

இன்று வடிவேலு இருக்கும் நிலைக்கு முழுக்க முழுக்க வடிவேலு மட்டும்தான் காரணமே தவிர, வேறு யாரும் இல்லை. அதற்கு சாட்சியான சில சம்வங்களைப் பார்க்கலாம்.

புதன், 4 பிப்ரவரி, 2015

ஒரு குழந்தைக்கு மூன்றுபேர் பெற்றோர் என்பது சரியா தவறா?

ஆரோக்கிய குழந்தைகளை உருவாக்குவதில் இது ஒரு மைல்கல் என்கிறார்கள் மருத்துவர்கள்

மூன்று பேரின் உயிர்க்கலங்களைக் கொண்டு உலகின் முதல் குழந்தையை உருவாக்கும் பரிசோதனைக்கு பிரிட்டன் அனுமதி. மரபணு மருத்துவ விஞ்ஞானிகள் வரவேற்பு; மதத்தலைவர்கள் எதிர்ப்பு

மூன்று பேரின் உயிர்க்கலங்களைக் கொண்டு உலகின் முதல் குழந்தையை உருவாக்கும் பரிசோதனைக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. மரபணு மருத்துவ விஞ்ஞானிகள் இதை வரவேற்றிருக்கிறார்கள். மதத்தலைவர்கள் எதிர்க்கிறார்கள்.

புற்று நோயுடன் போராடிய 14 வயது சிறுவன் சந்தனம் மரணம்

சந்தன். 14 வயதேயான இளம் போராளி. புற்று நோயுடன் போராடி வந்த இந்த சிறுவன் இன்று மாலை தனது போராட்டத்தை முடித்துக் கொண்டான், மரணத்தைத் தழுவினான். இந்திய விமானப்படை மீது மிகுந்த பிரியமும், அன்பும், ஏன் பக்தியும் வைத்திருந்தன சிறுவன் சந்தன். புற்றுநோய் முற்றிய நிலையில் உயிருக்குப் போராடி வந்த சந்தனின் மூச்சு இன்று மாலை நின்று போனது.

விமானி உயிரோடு எரித்துக் கொலை- ஐ.எஸ்.க்கு பதிலடியாக இரு தீவிரவாதிகளை தூக்கிலிட்டது ஜோர்டான்!!

அம்மான்: பிணைக் கைதியாக பிடித்து வைத்த ஜோர்டான் நாட்டு விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டு உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்கள் நாட்டு சிறையில் இருந்த பெண் தீவிரவாதி உட்பட இருவரை இன்று தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றியுள்ளதாக ஜோர்டான் அரசு அறிவித்துள்ளது.

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

பூனைக்காக தற்கொலை செய்த வயோதிபர் : யாழில் சம்பவம்

தான் வளர்த்த பூனைக்குட்டிகளில் ஒன்றை சகோதரி பிடித்து உறவினருக்கு கொடுத்தமையால் மனமுடைந்த நிலையில் வயோதிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழ்ப்பாணம் சுன்னாகம் கந்தரோடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பிரசவவலி ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு காரை செலுத்திச் சென்ற கர்ப்பிணிப் பெண் நெடுஞ்சாலையில் குழந்தைப் பிரசவம்

பிர­சவவலி ஏற்­பட்­ட­தை­ய­டுத்து தானே காரை செலுத்திச் சென்ற கர்ப்­பிணிப் பெண்­ணொ­ருவர் நெடுஞ்­சா­லை­யோ­ரத்தில் ஆரோக்­கி­ய­மான ஆண் குழந்­தையைப் பிர­ச­வித்த சம்­பவம் அமெ­ரிக்க உதாஹ் மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

தனது காதலியின் காதை கடித்து துண்டாக்கி தொண்டைக்குள் குடையை செலுத்த முயன்ற நபர்

தனது காத­லியின் காதை கடித்து துண்­டாக்கி அவரின் தொண்­டை­யி­னூ­டாக குடை­யொன்றை உட்­செ­லுத்­திய குற்­றச்­சாட்டில் நப­ரொ­ருவர் கைது செய்­யப்­பட்ட சம்­பவம் அமெ­ரிக்க மினே­ஸோரா மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

விசித்திரமான கோலத்தில் திருமண நிச்சயதார்த்த புகைப்படம்

திரு­மண நிச்­ச­ய­தார்த்­தத்திற் ­காக புகைப்­ப­டங்­களை எடுத்துக் கொள்ளும் ஜோடிகள் அந்த வைபவத்­துக்­காக விசே­ட­மாக வடி­வ­மைக்­கப்­பட்ட அலங்­கா­ர­மான ஆடை­களை அணிந்து புகைப்­ப­ட­மெ­டுத்­துக் கொள்வது வழமை.

கருத்தடை சத்திர சிகிச்சையின் பின்னரும் கருத்தரிக்க் முடியுமா??

குடும்ப கட்­டுப்­பாட்டு முறைகள் பல இருந்­தாலும் நிரந்­தர குடும்ப கட்­டுப்­பாட்டு முறை­யாக சொல்­லக்­கூ­டி­யது கருத்­தடை சத்­திர சிகிச்­சையே ஆகும். கருத்­தடை சத்­திர சிகிச்சை முறை­யா­னது பெண்­களின் பலோப்­பியன் குழாய்கள் கட்­டுப்­போ­டப்­பட்டு வெட்­டப்­ப­டு­வதன் மூலம் செய்­யப்­ப­டு­கின்­றது. இதனை LRT சத்­திர சிகிச்­சை­யென அழைப்­பார்கள். இவ்­வா­றான நிரந்­தர குடும்ப கட்­டுப்­பாட்டு முறையின் பின்னர் பெண் ஒருவர் தற்­செ­ய­லாக கூட மீண்டும் கருத்­த­ரிக்க முடி­யுமா? அவ்­வாறு கருத்­த­ரிக்கும் போது கரு­வா­னது கர்ப்­பப்­பை­யினுள் வள­ருமா? அல்­லது கர்ப்­பப்­பைக்கு வெளியே பலோப்­பியன் குழாயில் தங்­குமா என அறிய வேண்டும். இதற்கு விளக்கம் தர நான் அண்­மையில் கண்ட உண்மை சம்­ப­வத்தை தரு­கின்றேன்.

மொபைல் போன்களை பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசியங்கள்

ஆரம்பத்தில் அழைப்புகளை மேற்கொண்டு முக்கியமான தகவல்களை வேகமாக பறிமாறி கொள்ள கண்டறியப்பட்ட மொபைல் போன் இன்று பல விதங்களில் முன்னேறி விட்டது.இன்று அனைவரும் மொபைல் மூலம் பல வேலைகளை சுலபமாக செய்து வரும் நிலையில் மொபைல் போன் பற்றி உங்களுக்கு தெரியாத சில அம்சங்களை அடுத்து பாருங்கள்..

நாமல் ராஜபக்ஸவின் இன்றைய நிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் நாமல் ராஜபக்ஸவின் தற்போதைய நிலையை காட்டக் கூடிய புகைப்படங்கள் இவை.


Share |
Image Hosted by ImageShack.us

அப்பம் சாப்பிட்ட அமெரிக்க அமைச்சர்

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க அமைச்சர் நிஷா பிஸ்வால் வாழ்க்கையில் முதல் தடவையாக அப்பம் சாப்பிட்டு உள்ளார்.

எப்.எஸ்.பி தலைவர் குமார் குணரட்னம் இந்திய இராணுவத்துக்கு எதிராக கெரில்லாப் போரை நடத்தியவர் பாகம் - 2

“அநேகமான இராணுவ அதிகாரிகள் குமாரை விரும்பியதுடன் அவர்மீது அனுதாபமும் காட்டினார்கள். அவரை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக இராணுவம் அவரை கந்தளாயில் உள்ள உத்தியோகத்தர்கள் விடுதியில் விட்டிருந்தார்கள். மூத்த அதிகாரிகளுக்கு ஒரு தனிப்பட்ட உதவியாளனைப் போல அவர் பணியாற்றினார். கைது செய்யப்பட்ட ஜேவிபி சந்தேக நபர்களை எவ்வாறு கையாள்வது என்று இராணுவ உத்தயோகத்தர்களுக்கு குமார் ஆலோசனை வழங்கினார். இராணுவத்தினருடன் ஒரு பரஸ்பர ஒத்துழைப்பு உறவையும் கூட அவர் ஏற்படுத்திக் கொண்டார். மார்ச் 1990ல் இந்திய இராணுவம் சென்றதின் பின்னர் ஜூன் 1990ல் எல்.ரீ.ரீ.ஈ உடன் போர் வெடித்தது.

எப்.எஸ்.பி தலைவர் குமார் குணரட்னம் இந்திய இராணுவத்துக்கு எதிராக கெரில்லாப் போரை நடத்தியவர் பாகம் - 1

குமார் குணரட்னம் அல்லது குமார மாத்தையா மற்றும் நோயல் முதலிகே என்றும் அழைக்கப்படும்; முன்னணி சோஷலிசக் கட்சியின்(எப்.எஸ்.பி) அரசியற் குழுவின் முன்னணி உறுப்பினரைப் பற்றிய ஊகங்கள் இந்த நாட்களில் செய்திகளில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. தற்சமயம் ஒருமாத கால சுற்றுலா விசாவில் ஸ்ரீலங்காவில் தங்கியிருக்கும்; குமாரின்(அவரது முழுப் பெயர் பிரேம்குமார் குணரட்னம்) விசாவுக்கு கால நீட்டிப்பு வழங்கப்படாது மற்றும் அவர் நாட்டில் இருந்து வெளியேறியாக வேண்டும் அல்லது நாடுகடத்தப்படலாம். தற்சமயம் நோயல் முதலிகே எனும் பெயரில் ஒரு அவுஸ்திரேலிய கடவுச்சீட்டின் உரிமையாளராக குணரட்னம் உள்ளார். ஒரு மாதத்துக்கு முன்னதாக ஸ்ரீலங்காவுக்கு வருகை தந்திருந்த எப்.எஸ்.பி தலைவர், இங்கு அவர் தங்கியிருந்த காலப்பகுதியில் அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட காரணத்தால் சுற்றுலா விசாவுக்கான நிபந்தனைகளை மீறியுள்ளார் எனக் குற்றம் சாட்டப்படுகிறது.

இவர்களை நாம் கைவிட்டுவிட்டோம்

இராக்குக்கு 5 முறை வந்துவிட்டேன் 2007-க்குப் பிறகு. இப்போது பார்த்ததைப் போன்ற துயரத்தை இதற்கு முன்னால் பார்த்ததில்லை. இராக், சிரியா நாடுகளிலிருந்து வெளியேறிய அகதிகள் தங்க வைக்கப் பட்டுள்ள முகாம்கள், தற்காலிக வசிப்பிடங்கள் ஆகிய வற்றைப் பார்வையிட்டேன்.

திங்கள், 2 பிப்ரவரி, 2015

3 வயது சிறுவன் சுட்டதில் தந்தையின் இடுப்பை துளைத்து கர்ப்பிணி தாய் மீது பாய்ந்த குண்டு

அமெரிக்காவில் கைத்துப்பாக்கியை வைத்து விளையாடியபோது 3 வயது சிறுவன் தற்செயலாக சுட்டதில் அவரின் தந்தை மற்றும் கர்ப்பமாக உள்ள தாய் மீது குண்டு பாய்ந்தது.

‘சர்ச் ஆப் ஆல்மைட்டி காட்’ குழுவினருக்கு மரண தண்டனை

 image source: google
சீனாவில் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் ஒரு பெண்ணை கொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒரு சட்டவிரோத வழிப்பாட்டுக் குழுவை சேர்ந்த 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

'இன்னொரு முறை அகதி வாழ்க்கை வேண்டாம்... இந்தியாவில் இருந்து எங்களை போகச் சொல்லாதீர்கள்!'


தமிழக முகாம்களில் அகதிகள் உருக்கம் | தாய்நாடு திரும்ப ஒருசிலர் விருப்பம்

 தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் அந்நாட்டுக்கே திருப்பி அனுப்புவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அகதிகளை இலங்கைக்கே திருப்பி அனுப்ப எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல ஆண்டுகளாகத் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் என்ன கருதுகிறார்கள்? இதுபற்றி அறிய அவர்களைச் சந்தித்தோம்.

பேஸ்புக்கில் ஆபாச புகைப்படம்: நடிகை தற்கொலை முயற்சி

 லாவண்யா
பேஸ்புக்கில் தனது புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சின்னத்திரை நடிகை லாவண்யா புகார் அளித்துள்ளார்.

மின்சாரம் தாக்கி பலியான குரங்குக்கு இறுதிச் சடங்கு

திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்காநல்லூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்குக்கு பக்தர்கள் இறுதிச் சடங்கு செய்தனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல