வியாழன், 9 செப்டம்பர், 2010

புலிகளுடன் 12 நாடுகளுக்கு சென்றிருந்த ஊடக பிரமுகர் கனேடிய அதிகாரிகளின் வலையில்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர் மட்டக் குழுவினருடன் கடந்த காலங்களில் 12 நாடுகளுக்கு பயணித்து இருந்த ஊடகப் பிரமுகர் ஒருவரும் எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவை வந்தடைந்திருக்கின்றமை கண்டறியப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக ஆழிப் பேரலை நிவாரண நிதி கோரி வெளிநாடுகளுக்கு பயணித்து இருந்த புலி முக்கியஸ்தர்கள் ஆறு பேருடன் இவரும் கூடவே சென்றிருக்கின்றமை அம்பலம் ஆகி உள்ளது. கனேடிய அதிகாரிகள் இது குறித்து இவர் மீது நேற்று விசாரணை நடத்தினர்.

இவர் புலிப் பிரமுகர்களுடன் வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருந்தமையை ஆரம்பத்தில் மறுத்து விட்டார். ஆயினும் அதிகாரிகள் ஆதாரபூர்வமாக நிரூபித்தமையை அடுத்து ஒப்புக் கொண்டார்.

இருப்பினும் சுதந்திர ஊடகவியலாளராகவே அப்பயணத்தில் ஈடுபட்டிருந்தார் என்றும் அதற்காக அவர் புலிகளின் உயர் மட்டக் குழுவைச் சேர்ந்தவர் அல்லர் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். இவரை பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தொடர்ந்தும் தடுத்து வைக்க கனடா தீர்மானித்துள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல