வியாழன், 9 செப்டம்பர், 2010

பிரித்தானியாவில் இரகசியமாக புகலிடம் கோரும் மொஹமட் ஆசிப்!

‘ஸ்பொட்பிக்ஸிங்’ (spot-fixing) சர்ச்சையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அணியின் மொஹமட் ஆசிப் (Mohammad Asif) பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோர உத்தேசித்துள்ளதாக பிரித்தானிய பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.பாகிஸ்தானில் தற்போது கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பே இதற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அவர் அங்குள்ள குற்றவாளி குழுக்களால் தாக்கப்படலாம் என அச்சமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.ஆசிப் கடந்த வெள்ளிக்கிழமை குடிவரவு வழக்கறிஞர் ஒருவரை சந்தித்துள்ளார். மேலும் அவர் பிரித்தானியாவில் குடிபெயர்வதற்கான சட்ட திட்டங்கள் தொடர்பாகஆராய்ந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி இரகசிய சந்திப்பானது பிரித்தானியாவில் உள்ள விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சந்திப்பின் போது ஆசிப் கலக்கமடைந்து காணப்பட்டதாகவும் தனது தற்போதைய நிலை தொடர்பில் கவலை அடைந்துள்ளதாகவும் மேற்படி வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மொஹமட் ஆசிப் உட்பட 3 பேர் அச் சர்ச்சையில் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல