வியாழன், 9 செப்டம்பர், 2010

காட்டுமிராண்டித்தனத்தை கைவிட்ட ஈரான்

ஈரான் நாட்டு சட்டப்படி பெண்கள் கள்ளத் தொடர்பு வைத்து இருந்தால் அவர்கள் கல்லால் அடித்து கொல்லப்படுவார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவரை கல்லால் அடித்து கொல்ல உத்தரவிட்டார். எனவே அவருக்கு தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடுகள் நடந்தன.

ஆனால் தற்போது புனித ரமலான் மாதம் நடப்பதால் இது முடிந்ததும் தண்டனையை நிறைவேற்ற இருந்தனர். பெண்ணை கல்லால் அடித்து கொல்வதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஐரோப்பிய நாடுகளின் கமிஷன் தலைவர் ஜோஸ்பானுவேல் இதை காட்டுமிராண்டிதனம் என வர்ணித்தார். தண்டனையை ரத்து செய்யும்படி ஈரானை கேட்டுக் கொண்டார். இதையடுத்து கல்லால் அடித்து கொல்லும் தண்டனையை நிறுத்தி வைத்து இருப்பதாக ஈரான் வெளியுறவு மந்திரி ரமீம் தெரிவித்து உள்ளார்.

ஆனாலும் ஷகினக் அவருடைய கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதில் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்க அவருக்கு வாய்ப்பு உள்ளது. அவரை கல்லால் அடித்து கொல்லும் உத்தரவு தான் நிறுத்தப்பட்டு உள்ளது.

அந்த நாட்டில் மரண தண்டனை கைதிகளை தூக்கில் போடுவது வழக்கம். அதன்படி அவரை தூக்கில் போட வாய்ப்பு உள்ளது. சீனாவுக்கு அடுத்து ஈரானில் தான் அதிக அளவு மரண தண்டனை நிறை வேற்றப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டில் மட்டும் அங்கு 346 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல