யுத்தச் சூழ்நிலையில் தாய் தந்தையரை, தாய் அல்லது தந்தையை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு ஆதரவளித்து பராமரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும், இதனையடுத்தே நேர்டோ நிறுவனம் இவ்வாறான சிறுவர்களைப் பொறுப்பேற்று பராமரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர் சிறுமியரைப் பராமரிக்கக் கோரி உறவினர்கள் இந்த நிறுவனத்திடம் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களைப் பொறுப்பேற்று உரிய வசதிகளுடன் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நேர்டோ நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியிலும் ஆதரவற்ற சிறுவர்களை வைத்துப் பராமரிப்பதற்கான முயற்சிகள் இந்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வவுனியாவில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் நூற்றுக்கணக்கான ஆதரவற்ற சிறுவர்கள் பல்வேறு இடங்களில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக