வியாழன், 9 செப்டம்பர், 2010

அந்தரங்க நேரத்தில் வேறொரு ஆணின் பெயரை அழைத்த பெண் காதலனால் படுகொலை

Joanne Kitchen

வேறொரு ஆணின் பெயரை சத்தமாக கூறி அழைத்த பெண்ணொருவரை குரல்வளையை நெரித்து அவரது காதலர் கொன்ற சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
ஜோன்னி கிச்சன் (Joanne Kitchen 41)என்ற மேற்படி பெண், தனது காதலரான காரி ஹிக்ஸுடன் (Gary Higgs, 44) பல வருட காலமாக திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்ந்து வந்துள்ளார்.

சம்பவ தினம் மாடி அறையில் பாலியலின் போது ஜோன்னி கிச்சன், “கிறிஸ்“ (Chris) என்ற பெயரைக் கூறி சத்தமிடவும் காரி ஹிக்ஸ் கடும் சினமடைந்துள்ளார்.

கீழ்த் தளத்திற்கு சென்று கத்தியொன்றுடன் திரும்பிய காரி ஹிக்ஸ், ஜோன்னி கிச்சனை இரு தட வைகள் கத்தியால் குத்தியுள்ளார்.

அதன் பின் அவரது கழுத்தை மின்சார கம்பியால் இறுக்கிக் கொன்றுள்ளார்.

இது தொடர்பில் மான்செஸ்டர் கிறவுண் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணைகளின் போது காரி ஹிக்ஸ் சாட்சிய மளிக்கையில், ““கிறிஸ் என்பது யார் என்று ஜோன்னியிடம் கேட்டேன். அதற்கு ஜோன்னி, தனது மகளின் காதலனான கிறிஸை தான் நினைத்ததாகப் பதிலளித்தார்.
கிறிஸ் முதல்நாள் வீட்டுக்கு வந்ததை தான் அறிந்திருந்தேன். இந்நிலையில் என்னுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் போது ஜோன்னி, ஏன் தனது மகளின் காதலனை மனதில் நினைக்க வேண்டும் என்ற கேள்வி எனது மனதில் எழுந்தது. என்னால் சினத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை'' என்று கூறினார்.

““கிறிஸ் வீடு வந்த சமயம் உண்மையில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனது ஊகம் என்னை நிலைமறக்கச் செய்துவிட்டது'' என காஹிக்ஸ் மேலும் தெவித்தார்.

அவருக்கு 15 வருட கால சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காரிஹிக்ஸும் ஜோன்னி கிச்சனும் “பேஸ் புக்' இணையத்தளம் மூலமே ஒரு வருக்கு ஒருவர் அறிமுகமாகி காதல் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல