வியாழன், 9 செப்டம்பர், 2010

சைக்கிள் ஓட்டி பால் விநியோகம் செய்யும் நன்றியுள்ள நாய்

சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் சைக்கிளை ஓட்டி, பால் விநியோகம் செய்துவருகிறது “மணி' என்கின்ற நாய்.
தர்மபுரியை அடுத்த பெரியாம்பட்டி கீழ் தும்பல அள்ளியைச் சேர்ந்தவர் தங்கவேல்.

விவசாயியான இவர் ஒரு நாள் தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நாயை வளர்க்க ஆரம்பித்தார்.
அதற்கு மணி என்றும் பெயர் வைத்தார்.

தினமும் காலை மற்றும் மாலையில் பாலைக் கறந்து, தும்பல அள்ளியில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கு எடுத்துசென்று கொடுத்து வரும் தங்கவேல், தன்னுடன் மணியையும் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டார். இதனைத் தொடர்ந்து மணி மூலம் பால் கொடுத்து அனுப்ப முடிவு செய்தார் தங்கவேல். அதன்படி ஒரு தூக்குவாளியில் பாலையூற்றி, நாயிடம் கொடுத்தார். அதுவும், வாயில் கவ்வியபடி பாலை எடுத்துசெ சன்று, சரியான நபரிடம் கொடுத்துத் திரும்பியது.

இதையடுத்து, 1,500 ரூபாய் செலவில், பால் கேன்களை ஏற்றிச் செல்லும் வகையில் சிறிய சைக்கிளை உருவாக்கிய தங்கவேல், மாடுகளைப் பூட்டுவது போல் நாயைப் பூட்டி, அதில் 35 லீற்றர் பால் கேனையும், கூட்டுறவு சங்க பதிவேட்டுப் புத்தகத்தையும் அனுப்பிவைத்தார்.

அவர் நினைத்தபடியே நாயும் உரிய பணியை செய்து விட்டுத் திரும்பியது.

சில நேரங்களில் எனது மகனயும் மகளையும் சைக்கிளில் சுமந்தபடி கூட மணி பயணம் செய்யும் என்ற தங்கவேல், பால் கேனுடன் சென்று தனது பணியை செய்து விட்டுத் திரும்பிவரும் மணிக்கு வீட்டில் உள்ளவர்கள் ஆரத்தி எடுத்து, திருஷ்டி கழிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள் என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல