வியாழன், 9 செப்டம்பர், 2010

13 கிலோ எடையுள்ள கோல்ட் பிஷ்

பிரான்ஸை சேர்ந்த இளைஞர் ஒருவர் 13 கிலோகிராம் (30 இறாத்தல்) நிறையுடைய கோல்ட் பிஷ் ரக மீனொன்றைப் பிடித்துள்ளார்.   மூன்று வயதுடைய சராசரி சிறுமியின் எடையை இம்மீன் கொண்டுள்ளது.

இதுவரை பிடிக்கப்பட்ட மிகப்பெரிய கோல்ட் பிஷ் ரக மீன்களில் ஒன்றாக இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பிரான்ஸின் தென் பகுதியிலுள்ள ஏரியொன்றிலிருந்து இந்த மீனை பிடித்த ரபாயெல் பியாகினி (Raphael Biagini), இதுகுறித்து கூறுகையில், இந்த மீனை பிடிப்பதற்காக ஆறு வருடங்கள் காத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

தூண்டிலின் இறுதியில் என்ன இருக்கும் என்பதை எங்களால் கூறமுடியாதிருந்தது. ஆனால், அந்த மீன் மிகவும் பெரியது என்று எங்களுக்குத் தெரியும்.

அந்த மீன் எதிர்த்துப் போராடுவதில் சிறந்ததாக இருந்தது. ஆனால், அதனால் வெற்றிபெற முடியவில்லை என பியாகினி கூறியுள்ளார்.

இறுதியில், அந்த மீனுடன் படம் பிடித்துக்கொண்டபின் அவர் அந்த மீனை மீண்டும் தண்ணீரில் விட்டுச்சென்றமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல