வெள்ளி, 12 நவம்பர், 2010

போதைவஸ்து குழுவுக்காக பணத்தை பெற்று படுகொலை செய்யும் 12 வயது சிறுவன் (படங்கள் இணைப்பு)

மெக்ஸிக்கோவில் போதைவஸ்து குழுவொன்றைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் தொடர் கொலைகளை செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான்.

எல் பொன்சிஸ் என்ற இந்த சிறுவன் போதை வஸ்து குழுவொன்றுக்காக கட்டணம் பெற்று படுகொலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

மெக்ஸிகோவில் போதைவஸ்து குழுக்கள் போதைவஸ்து வர்த்தகத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக ஒன்றுடன் ஒன்று போராடி வருகின்றன.

இந்நிலையில் குறிப்பிட்ட போதைவஸ்து குழுவொன்றிடமிருந்து கட்டணமாக பணத்தைப் பெற்று எல் பொன்சிஸ் எதிர் குழுவைச் சேர்ந்தவர்களை சித்திரவதை செய்து படுகொலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஆழமாக வெட்டும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எதிராளிகளின் கழுத்தை வெட்டி மேற்படி படுகொலை செய்வதை எல் பொன்சிஸ் வழக்கமாக கொண்டுள்ளான். எல் பொன்சிஸ் எதிராளிகளின் கழுத்தை வெட்டி படுகொலை செய்யும் காட்சிகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதையடுத்து அவனைத் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.

இந்தச் சிறுவன் தனது சகோதரிகள் உட்பட பெண்களைக் கொண்ட குழுவொன்றுடன் இணைந்து மேற்படி படு கொலைகளை அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.

எல் பொன்சிஸும் அவனது குழுவினரும் படுகொலைக்குப் பின், வானில் சடலத்தை ஏற்றிச் சென்று கைவிடப்பட்ட தளங்களில் புதைத்து விட்டுச் செல்வார்கள் என பிராந்திய இராணுவ பேச்சாளர் ஒருவர் கூறினார்.
மொரேலொஸ் மாநிலத்தின் போதை வஸ்து குழு தலைவர்களில் ஒருவரான ஜூ லியோ ஜீஸஸ் ரடில்லாவின் கீழே எல் பொன் சிஸ் பணியாற்றி வருவதாக நம்பப்படுகிறது.
மெக்ஸிக்கோவில் போதைவஸ்து குழுக்களால் தினசரி 50 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல