வெள்ளி, 12 நவம்பர், 2010

சாட்சியமளிக்காமல் வீடு திரும்பினார் தயா மாஸ்டர்

யாழ்.குடா நாட்டிலே இன்று கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் முன் சாட்சியம் அளிக்க இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளரான தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி இன்று யாழ்.கச்சேரியில் சாட்சியாளர்களின் தொகை அதிகமாக காணப்பட்டதால், நாளைய தினம் சாவகச்சேரியில் இடம்பெறவுள்ள அமர்விற்கு முன்நேர அனுமதியை பெற்றுச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

யாழ்.குடா நாட்டிலே நேற்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் இன்றைய தினம் பேராசிரியர்.பாலசுந்தரம் பிள்ளை, சிற்றம்பலம், முன்னாள் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சி.வி.கே.சிவாஞானம் மற்றும் யாழ் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் இணைப்பாளர் பரமநாதன் ஆகியோர் இன்று சாட்சியமளித்துள்ளனர்.

இன்றும் பல நூற்றுக் கணக்கான மக்கள் தமது காணமல் போன பிள்ளைகள் தொடர்பில் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல