விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந் தியாவில் விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டதை இரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை டில்லி, சென்னை மற்றும் ஊட்டி ஆகிய நகரங்களில் நடைபெற்றன.இந்த வழக்கு விசாரணை மீண்டும் டில்லி யில் உயர் நீதிமன்ற நீதிபதி விக்கிரம்ஜித் சென் தலைமையிலான தீர்பாயத்தில் நடை பெற்றது.
இந்த விசாரணையின் முடிபில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது என்று நீதிபதி தீர்ப் பளித்தார்.இந்த தீர்ப்பையளித்த நீதிபதி விக்ரம்ஜித் சென், விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களில் எஞ்சியுள்ளவர்கள் இந்திய மண் ணை சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன் படுத்தி வருகின்றனர்.இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக் கத்தை தடை செய்வதற்கு போதுமான ஆதரங்கள் உள்ளன.
எனவே அந்த இயக்கத்தின் மீதான தடை யை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்து, கடந்த மே 14ஆம் திகதி மத்திய அரசு வெளி யிட்ட அறிவிப்பு உறுதி செய்யப்படுகிறது என்றார்.புலிகள் மீதான தடை நீடிப்பை இரத்து செய்யக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலா ளர் வைகோ. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட் டோர் தீர்ப்பாயத்தில் வாதிட்டு வந்தது குறிப் பிடத்தக்கது.
இதற்கிடையே இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்கள் காரணமாக அங் கிருந்து தப்பியோடி இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் புகைப்படங்களுடனான விபரங் கள், கடவுச்சீட்டு இலக்கம் என்பன தற்போதை க்கு இந்திய அரசாங்கத்தின் பிரதான உளவுப் பிரிவிடம் இலங்கை அரசாங்கத்தால் கையளிக் கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் குறித்த நபர்கள் இந்தியாவில் இருந்து எந்த நாட்டுக்கும் வெளியேறிச் செல்லமுடியாதவாறு தடுக்கப்படுவதுடன் புலி களுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடு பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர் என்றும் தெரியவருகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக