வெள்ளி, 12 நவம்பர், 2010

ஆணொருவரை கடத்திச் சென்று கப்பம் கோரிய பிரித்தானிய பெண்

ஆணொருவரை கடத்திச் சென்று கப்பம் கோரிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

அர்மோய் எனும் இடத்தைச் சேர்ந்த சப்ரீனா அன்ட்றியா மக்குக் (31 வயது) என்ற இந்த பெண், குறிப்பிட்ட நபரை கடந்த வியாழக்கிழமை ரன்டல்ஸ்டவுன் நகரிலிருந்து கடத்திச் சென்றுள்ளார்.

அவருக்கு உடந்தையாக செயற்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனது வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட மேற்படி நபரை சப்ரீனாவும் அவரது கையாட்களும் காருடன் கடத்திச் சென்று கப்பப் பணம் கோரியுள்ளனர்.

அதன் பின் ஒருநாள் கழித்து குறிப்பிட்ட நபர், அர்மோய் எனும் இடத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அந்நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சப்னாவும் அவரது கையாட்களும் கைது செய்யப்பட்டனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல