வெள்ளி, 12 நவம்பர், 2010

சூதாட்டத்திற்கு இலங்கையில் புதிய சட்டம்

இலங்கையில் சூதாட்டத்தை முழுமையாக முறைப்படுத்தும் சட்டத்தை முதல்முறையாக இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. ஆனால் இந்த சட்டமானது சமீபகாலமாக இலங்கை அரசு கடைபிடித்துவரும் சமூக கட்டுப்பெட்டித்தனமான நடவடிக்கைகளுக்கு நேர் முரணானதாக அமைந்திருக்கிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு கட்சிகளின் நாடாளுமன்றஉறுப்பினர்களால் நிறைந்திருக்கும் நாடாளுமன்ற அவையில் பெரும்பான்மை வாக்குகளுடன் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

சூதாட்டம் என்பது இலங்கைக்கு புதிதல்ல. ஏற்கெனவே இலங்கையில் பல இடங்களில் கேசினோக்கள் எனப்படும் சூதாட்ட விடுதிகள் தங்களின் ஒளிரும் நியான் விளக்குகளால் பார்வையாளர்களை சுண்டியிழுத்து வருகின்றன. இங்கெல்லாம் வெளிநாட்டில் நடக்கும் குதிரைப்பந்தயங்கள் தொடர்பில் பணம் வைத்து பந்தயம் கட்டும் நடைமுறைகள் ஏற்கெனவே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இந்த சூதாட்ட விடுதிகள் இதுவரை காலமும் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தொடர்ந்து இயங்கி வருவதோடு, உள்ளூராட்சி நிர்வாகத்திற்கு வரிகட்டிக்கொண்டும் இருந்து வருகின்றன.

ஆனால் இந்த சட்டத்திருத்தம் காரணமாக, இனிமேல் சூதாட்ட விடுதிக ளுக்கான அனுமதி அளிக்கும் அதிகாரமானது இலங்கை நடுவணரசின் நேரடி கட்டுப்பாட்டில் வருகிறது. இதன்படி, ஒரு ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் களியாட்ட விளையாட்டுக்களுக்கான பிரதேசமாக அறிவிக்கும் அதிகாரம் இலங்கை அமைச்சரிடம் வருகிறது.

இனிமேல் உரிய அரச அனுமதி இல்லாமல் யாராவது சூதாட்ட விடுதிகள் நடத்தினால் அப்படி செய்பவர்கள் பெரும் அபராதத்தொகை கட்டவேண்டி வரும் என்பதோடு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையை யும் அனுபவிக்க வேண்டி வரும்.

அடுத்த ஆறு ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் தனது சுற்றுலாத்துறையின் வளர்ச்சியை ஐந்துமடங்காக உயர்த்த விரும்புவதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த புதிய சட்டம் அதற்கு உதவியாக இருக்கும் என்று அமைச்சர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், தற்போதைய அரசாங்கம், தனது நண்பர்கள் சூதாட்ட விடுதிகள் நடத்துவதற்கு உதவியாக இந்த சட்டத்தை கொண்டுவந் திருப்பதாக, பிரதான எதிர்கட்சித்தலைவர் ரனில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டுகிறார்.

BBC Tamil
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல