அநுராதபுரம், கலத்தாவ பகுதி வியாபாரியான லக்ஷ்மன் பிரியதர்ஷன என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார்.
பாதிக்கப்பட்ட பெண் குறித்த சந்தேக நபரின் கடைக்கு பாண் வாங்கச் சென்றபோது பலாத்காரமாக கடையினுள் இழுத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட முற்பட்டார் என்றும் இதன்போது அவரிடமிருந்து தப்பியோடி வீட்டுக்குச் சென்று தனது கணவனுடன் அநுராதபுரம் பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவில் குறித்த பெண் முறைப்பாடு செய்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக