வெள்ளி, 12 நவம்பர், 2010

எழுத்து வடிவ செய்திகளை அனுப்புவது இள வயதினரின் ஆரோக்கியத்துக்கு கேடு

கையடக்க தொலைபேசி மற்றும் இணையத்தளம் மூலமாக அளவுக்கதிகமான எழுத்து வடிவ செய்திகளை அனுப்புவது இளவயதினரின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடியது என அமெரிக்க மருத்துவ நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

ஓஹியோ மாநிலத்தில் கிளேவ்லான்டிலுள்ள கேஸ் வெஸ்டர்ன் ஸேர்வ் மருத்துவ பாடசாலையைச் சேர்ந்த மருத்துவரும் பொது சுகாதார நிபுணருமான ஸ்கொட் பிராங்கால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கையடக்க தொலைபேசி மற்றும் இணையத்தளம் மூலம் ஒரு நாளுக்கு 120 க்கு மேற் பட்ட எழுத்து வடிவ செய்திகளை அனுப்பும் இள வயதினர் குடிபோதை, புகைப்பழக்கம் மற்றும் பாலியல் போன்றவற்றிற்கு அடிமையாவது தனது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்கொட் பிராங் தெரிவித்தார்.

20 உள்ளூர் பாடசாலைகளைச் சேர்ந்த 13 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய சுமார் 4000 மாணவர்களிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர் களில் 20 சதவீதமானவர்கள் பாடசாலை நாளொன்றில் கையடக்க தொலைபேசி மூலம் 120 க்கு மேற்பட்ட எழுத்துவடிவ செய்திகளை அனுப்பி வந்துள்ளனர்.

அளவுக்கதிகமாக எழுத்து வடிவ செய்திகளை அனுப்பும் வழக்கத்தைக் கொண்ட இந்த மாணவர்கள், ஏனைய மாணவர்களை விட புகைபிடித்தல், மது, போதைவஸ்து பாவனை மற்றும் பாலியல் போன்றவற்றில் அதிகளவில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகள் டென்வரில் இடம்பெற்ற அமெரிக்க பொது சுகாதார சங்க கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல