வெள்ளி, 12 நவம்பர், 2010

பிரபாகரனின் மரணத்தை அறிந்தபோது என்னால் சாப்பிடவே முடியவில்லை - கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் கழிவிரக்கம்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக் கத்தின் தலைவர் வே.பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியை அறிந்த பொழுது என்னால் அன் றைய தினம் காலை உணவை சாப் பிட முடியவில்லை என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

திருகோணமலை இராம கிருஷ்ண சங்க சிறி கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், உள்ளக் கமலம் மலர் வெளியீடும் நேற்று இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிள்ளையான் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, வே.பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருப்பார் என்றால் நான் இச்சபையினர் முன்னிலையில் பேசிக்கொண்டிருக்க முடியாது. நான் இங்கு கொல்லப்பட்டிருப்பேன் என்னுடன் சேர்ந்து இங்கிருக்கும் நீங்களும் கொல்லப்பட்டி ருக்கலாம். ஆனால் பிரபாகரன் இறந்துவிட்டார் என்கின்ற செய்தியை அறிந்த போது, அச்செய் தியை தொலைக் காட்சியில் பார்த்துக் கொண்டி ருந்த போது என்னால் அன்று காலை உண வை உண்மையிலேயே சாப்பிட முடிய வில்லை.

பிரபாகரன் அழிந்தமைக்கு இயக்கத்திற் குள் ஏற்பட்ட பிளவு ஒரு போதும் காரணமல்ல. கருணா அம்மானும் நானும் இயக்கத்திலிருந் திருந்தால் கூட பிரபாகரன் கொல்லப்பட்டிருப்பார். நடக்க இருக்கின்றவற்றை எவராலும் தடுக்கவேமுடியாது. புலிகள் இயக்கத்தால் இழைக்கப்பட்ட தவறுகளுக்கு நான் இயலு மான வரை பரிகாரம் தேடிக் கொண்டிருக்கிறேன். கடந்த கால தவறுகள் சரிசெய்யப்பட வேண் டும். அத்தவறுகளை நியாயப்படுத்தக் கூடாது. தனி நாடு என்பது பெரிய இலட்சியம்.

அந்த இலட்சியத்தை அடையக் கூடிய வலிமை எங்களுக்கு இருந் ததா? அவ் இலட் சியத்தை அடைய சர்வதேச அங்கீகாரம், இளைஞர்களுக்கான சரியான வழிகாட்டல் ஆகியன அவசியமாக இருந்தன. தமிழ்த் தலைவர்கள் தவறு இழைத்து விட்டனர். சிங் களத்தலைவர்களை மாத்திரம் குறை சொல்லி பயனில்லை. சம்பந்தன் ஐயா சுயாட்சி, சுய நிர்ணய உரிமை கிடைக்கும் என்று நம்புகின்றாரா? அவை கிடைக்காது. வடக்குக் கிழ க்கு மாகாணங் களின் இணைப்பு மிகவும் தீமை பயக்ககூடியது. பிரிந்த வடக்கு கிழக்கே பயன் உடையது என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல