வெள்ளி, 12 நவம்பர், 2010

9 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறும் சிறுவன்

நேபாள நாட்டை சேர்ந்த சிறுவன் டிசேட்டன் ஷெர்பா. 9 வயதான இவன் இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைப்பதற்காக புறப்பட்டு இருக்கிறான். கடந்த வாரம் இந்த சிகரத்தில் உள்ள 19 ஆயிரத்து 700 அடி உயர சிகரம் ஒன்றில் சாதனை படைத்த அவன் தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வருகிறான்.

இதுவரை மிக இளம் வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்தது அமெரிக்க சிறுவன் ஜோர்டான் ரொமேரோ தான். இவன் 13 வயதில் இந்த சாதனையை கடந்த மே மாதம் நிகழ்த்தினான். இந்த சாதனையை முறியடிக்கும் நோக்கத்துடன் ஷெர்பா மலை ஏறி வருகிறான்.

இவன் தந்தை பெம்பா டோர்ஜி ஷெர்பாவும் மலை ஏறும் வீரர் தான். அவர் மிக வேகமாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தவர். இவர் 8 மணி 10 நிமிடத்தில் இந்த சிகரத்தில் ஏறினார். இவர் தன் மகனும் இளவயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்று விரும்பினார்.

நேபாள நாட்டுச்சட்டப்படி, மலை ஏறுபவர்கள் 16 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதனால் பெம்பா டோர்ஜி அரசாங்கத்தை அணுகி தன் மகன் மலை ஏறுவதற்கு சிறப்பு அனுமதி பெற்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல