பாகிஸ்தானை சேர்ந்த சர்ச்சைக்குரிய நடிகை வீனா மாலிக். கடந்த 2009 இல் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஆசிப்பை திருமணம் செய்து கொண்டார் என செய்திகள் வெளியாகின. இதனை இருவரும் மறுத்தனர். பின் இந்திய கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடன் ஆசிப்புக்கு தொடர்பு இருப்பதாக கூறினார். இதற்கான ஆதாரங்களை ஐ.சி.சி.யிடம் வழங்கினார்.
சமீபத்தில் பேட்டி அளித்த வீனா, டில்லியை சேர்ந்த பத்திரிகையாளரும் கிரிக்கெட் “படப்பிடிப்பாளருமான' தீரஜ் தீக் ஷித் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். இதனை மறுத்த தீரஜ் கூறியது: வீனா மலிக் தான் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் என் மீது வீணாக பழி சுமத்துகிறார்.
இவரது பிடியில் 7 பாகிஸ்தான் வீரர்கள் உள்ளனர். தொலைக்காட்சிகள் இவரை பிரபலமானவர் போல் காட்டுகிறது.
நடத்தை சரியில்லாத ஒருவரை பிரல்யப்படுத்துவது தவறு. இவர் இந்திய மண்ணில் ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது. இவரது “கடவுச்சீட்டை உடனடியாக ரத்துச் செய்யும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். நானும் ஆசிப்பும் நல்ல நண்பர்கள் என்பதை புரிந்து கொண்டு சூதாட்டத்தில் ஈடுபடும்படி என்னை வலியுறுத்தினார். இதனை ஏற்க மறுத்தேன்.
“ஸ்பாட் ஃபிக்சிங்கில்' பாகிஸ்தான் வீரர்கள் ஈடுபட காரணமாக இருந்த மசார் மஜித்துக்கும் வீனாவுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. வீனா மீது சட்டப் படி வழக்கு தொடுக்க உள்ளேன் என்று கூறினார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக