செவ்வாய், 11 ஜனவரி, 2011

இறைவனை வணங்கினால் திருடன் வருகிறான்! சுழிபுரத்தில் அதிசயம்

யாழ்ப்பாணம், சுழிபுரம் பத்திரகாளி கோயிலடிப்பகுதியில் நேற்று காலை கணவர் வீட்டிலிருந்து வேலைக்குப் புறப்பட்ட பின்னர் நீராடிவிட்டு இறைவனை கும்பிட்டுக்கொண்டிருந்தபோது மூன்று கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் நுழைந்து பெண்ணை அச்சுறுத்தி சுமார் 35 பவுன் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தக் களவுச் சம்பவத்தில் மற்றுமொரு சிறப்பான விடயம்தான் குறித்தப் பெண்ணிடம் இருந்த கவரிங் நகைகளை அடையாளம் கண்ட திருடர்கள் எங்களுக்கு கவரிங் நகை வேண்டாம் சுத்தத் தங்கம்தான் வேண்டும் என அச்சுறுத்தியதும் அந்தப்பெண் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக் கொடுத்துவிட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல