செவ்வாய், 11 ஜனவரி, 2011

வேலைக்கார பெண்ணுக்கு இஸ்திரி பெட்டியால் சூடு வைத்த பெண்ணுக்கு 3 ஆண்டு ஜெயில் (படங்கள் இணைப்பு)

சவுதி அரேபியாவில் உள்ள அரபு ஷேக்குகளின் வீடுகளில் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த பெண்கள் வேலைக்காரிகளாக இருக்கிறார்கள். அவர்களை எஜமானர்களும் அவர்கள் மனைவிகளும் அடித்து உதைப்பதாகவும், சித்ரவதை செய்வதாகவும் பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.

இப்போதுதான் முதல் முறையாக இப்படி சித்ரவதை செய்த சவுதி அரேபிய பெண்ணுக்கு சிறைத்தண்டனை கிடைத்து உள்ளது. சித்ரவதைக்கு உள்ளான வேலைக்கார பெண்ணின் பெயர் சுமிஹாடி.
சுமிஹாடி பிண்டி சாலான் முஸ்தபா (23) என்ற அப்பெண் இந்தோனேஷியாவை சேர்ந்தவர். இவர் மதீனா நகரில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். அந்த வீட்டு உரிமையாளரின் மனைவியான அரபு பெண், இவரை அடித்து உதைத்ததோடு, இவர் உடலில் பல இடங்களிலும் இஸ்திரி பெட்டியால் சூடு வைத்தார்.தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இவரது தலையில் இஸ்திரி பெட்டியால் ஏற்படுத்தப்பட்ட எரி காயங்கள் காணப்படுவதுடன் உதடுகளும் கத்தரிக்கோலினால் வெட்டப்பட்டுள்ளன.

மேற்படி பெண்மணியின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியதைத் தொடர்ந்து இந்தோனேசிய ஜனாதிபதி சுசீலோ மாம்பாங் தனது நாட்டு பிரஜைக்கு உடனடியாக நீதி வேண்டும் என கோரியிருந்தார்.



இந்நிலையில் கடந்தவாரம் இப்பெண்ணின் எஜமானிக்கு 3 வருட சிறைத்தண்டனை வழங்கி மெதீனா நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இவ்விடயம் தொடர்பில் சவூதி அரசாங்கம் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருந்தது.

எனினும் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மனித உரிமை அமைப்புக்கள் சவூதி மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் பணிபுரியும் பல பெண்கள் இத்தகைய இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல