செவ்வாய், 11 ஜனவரி, 2011

இலங்கைப் பணிப்பெண்ணின் விசாரணைகள் துரிதம்

கடந்த வருடம் நவம்பர் 5 ஆம் திகதி மர்மமான முறையில் சவுதி அரேபியாவில் உயிரிழந்த இலங்கை வீட்டுப்பணிப் பெண்ணின் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு தற்போது சட்ட வைத்திய பரிசோதனை அறிக்கைகளுக்காக காத்திருப்பதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

புஸ்பவள்ளி செல்லத்துறை என்ற இலங்கை வீட்டுப் பணிப்பெண் கடந்த வருடம் நவம்பர் 5 ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவரது மரணம் தொடர்பில் சந்தேகமிருப்பதாக இவரது உறவினர்கள் தெரிவித்ததை அடுத்து உயிரிழந்த பணிப்பெண்ணின் வேலை வழங்குனர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புஸ்பவள்ளி 4 வருடங்களின் முன்பு தனது கணவரை இழந்தவர் எனவும் இவருக்கு 13 தொடக்கம் 6 வயதில் 4 குழந்தைகள் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது குழந்தைகளை கருத்திற் கொண்டு குறித்த பெண்ணின் சடலம் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என சகோதரி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், அவரது குழந்தைகளுக்கு எவரேனும் உதவ முன்வந்தால் அதுகுறித்து தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல