ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

4 வருடமாக கனவில் பாம்புடன் செக்ஸ்... ஆண் குழந்தைக்கு தாயான பெண்.... இது நைஜீரிய கூத்து!

நைஜீரியாவில் இளம்பெண் ஒருவர் கனவில் பாம்புடன் உடலுறவு கொண்டு ஆண் குழந்தையை பிரசவித்ததாக கூறும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள ஓயோ மாநிலத்தின் ஓக்போமோஸோ பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண்ணான கெஹிண்டே அடெகோக். இவர் கடந்த 4 ஆண்டுகளாக கனவில் பாம்புகளுடன் உடலுறவு வைத்து கொண்டதாகக் கூறி வருகிறார். அதாவது, அவரது கனவில் பாம்பு ஒன்று ஆணாக மாறி அவருடன் உடலுறவு கொள்வதாக அவர் கூறுகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. கனவு மூலமே கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ளதாகக் கூறுகிறார் அடெகோக். மேலும், இதுவரை தான் வேறெந்த ஆடவருடனும் உடலுறவு கொண்டதில்லை என்றும் அவர் சத்தியம் செய்கிறார்.

அடெகோக் கூறுவது உண்மை என நிரூபிப்பது போல, அவரது குழந்தைக்கு கீழ்தாடை பகுதியில் பாம்புகளுக்கு இருப்பது போல் கூர்மையான இரு பற்கள் காணப்பட்டன. பிறந்து ஒருநாள் மட்டுமே வாழ்ந்த அக்குழந்தை உயிர் வாழ்ந்தது.

பொதுவாகவே பேய், பிசாசு புனைக்கதைகள் மற்றும் பில்லி, சூனியம், ஏவல் போன்ற மாந்தரீகத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்ட நைஜீரிய மக்கள், அடெகோக்-கின் பாம்புக் கதையைத் தான் தற்போது பேசி வருகின்றனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல