ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பா? இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டணி மறுப்பு

விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டணி மறுப்புத் தெரிவித்தது. இதுகுறித்து இலங்கையில் இருந்து வெளியாகும் "தி சன்டே லீடர்' வார இதழுக்கு அளித்த பேட்டியில் அக்கட்சியின் எம்.பி. எம்.ஏ. சுமந்திரன் கூறியிருப்பதாவது:


விடுதலைப்புலிகளுடன் நாங்கள் எப்போதும் கூட்டணி வைத்தது கிடையாது. அவர்களது சித்தாந்தத்தை ஏற்றதும் கிடையாது.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகதான் நாங்கள் போராடுகிறோம்.

பயங்கரவாதத்தில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது.

அதை ஊக்குவித்ததும் கிடையாது.

இதை அனைவரும் அறிவார்கள்.

விடுதலைப்புலிகள் விவகாரம்: விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்கலாம் என்று தெரிவிக்கப்படுவது குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை. நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்ற செய்திகளை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன.

விடுதலைப்புலிகள் மீண்டும் அணி சேருவதாக தெரிவிக்கப்படுவதில், எந்த உண்மையும் கிடையாது. அப்படி, ஒரு வேளை விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், அவர்களுக்கு மக்களின் ஆதரவு இருக்காது.

ஏனெனில், இலங்கையில் நீண்ட நாள்களாக நடைபெற்ற உள்நாட்டுப் போரால் பெருமளவில் பாதிக்கப்பட்டது மக்கள்தான்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி: இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ் தேசிய கூட்டணித் தலைவர் ஆர். சம்பந்தனுக்கு வழங்க வேண்டும்.

அமைச்சர் பதவிகளுக்காக தமிழ் தேசிய கூட்டணி எந்த பேரத்திலும் ஈடுபட்டதில்லை. பலமுறை தமிழ் தேசியக் கூட்டணி தேடி வந்த அமைச்சர் பதவியை பலமுறை நிராகரித்துள்ளது.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தமிழ் தேசியக் கூட்டணி தொடர்ந்து பாடுபடும் என்றார் சுமந்திரன்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல