ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

விரல் சூப்பும் பழக்கம் ஆபத்தானதா?

விரல் சூப்பும் பழக்கம் கொண்ட குழந்­தை­களை திருத்­து­வது என்­பது மிகவும் கடின­மான விடயம்.

உண­வு­களை கூட எப்­ப­டி­யா­வது சாப்­பிட வைத்­து­வி­டலாம், ஆனால், இந்தப் பழக்­கத்தில் இருந்து அவர்­களை மீட்­டெ­டுப்­பது என்­பது எல்லா தாய்­மார்­க­ளுக்கும் ஒரு சவால் ஆகும்.

விரல் சூப்பும் பழக்கம் ஏன் வரு­கி­றது?

குழந்­தை­க­ளுக்கு 45 நாட்­களில் இருந்து, 2 மாதங்­க­ளுக்குள் விரல் சூப்பும் பழக்கம் ஆரம்­பிக்­கலாம்.



ஆரம்ப நிலையில் குழந்­தைகள் ஒவ்­வொன்­றையும் புதி­ய­தாக தெரிந்­து­கொள்ள முற்­படும் ஆர்வம் கார­ண­மா­கத்தான் விரலை சூப்பத் தொடங்­கு­கின்­றன.

6 மாதம் வரை விரல் சூப்­பு­வது தப்­பில்லை. அந்தக் காலங்­களில், குழந்­தையின் கையை தட்­டி­வி­டு­வது, விரல்­களில் வேப்­பெண்ணெய் தடவி விரல் சூப்பும் பழக்­கத்தைத் தடுப்­ப­தெல்லாம் அவ­சி­யமே இல்லை.

இந்த அணு­கு­மு­றை­களால், குழந்­தை­க­ளிடம் விரல் சூப்பும் பழக்கம் அதி­க­ரிக்­குமே தவிர குறைய வாய்ப்­பில்லை.

குழந்­தை­க­ளிடம் அன்­பாக பேசி, விரல் சூப்பும் பழக்கம் தவ­றா­னது எனப் புரிய வைத்து, அப்­ப­ழக்­கத்தை நிறுத்த முயற்சி செய்ய வேண்டும்.

அம்மா, அப்பா தன்­னுடன் இல்லை என்­கின்ற பயம், அதனால் ஏற்­ப­டு­கிற பாது­காப்­பின்மை உணர்வு, இன்­னொரு குழந்தை பிறந்த பிறகு, தனக்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்லை என்ற எண்ணம் போன்ற கார­ணங்­களால், விரல் சூப்பும் பழக்கம் குழந்­தை­க­ளுக்கு ஏற்­ப­டு­கி­றது.

இருட்டு, அதிக ஓசை கேட்­பதால் மனதில் ஏற்­படும் பயம், பெற்றோர் போன்ற நெருங்­கிய உற­வி­னர்­களைப் பிரிதல், காப்­ப­கத்தில் விடப்­ப­டுதல் போன்ற உள­வியல் கார­ணங்­க­ளாலும், ஆட்­டிசம் குறை­பாடு கார­ண­மா­கவும், செயல்­பாடு இல்­லாத நிலை (Boredom)யாலும் இப்­பழக்கம் குழந்­தை­க­ளுக்கு உண்­டாகும். இதற்கும் பரம்­பரைத்­தன்­மைக்கும் எவ்­விதத் தொடர்பும் கிடை­யாது.

நடக்கப் பழகத் தொடங்கும் 9 மாதக் குழந்­தை­களின் மூளை மற்றும் விரல்­க­ளுக்கு ஏதா­வது வேலை கொடுத்­துக்­கொண்டே இருக்க வேண்டும்.

பெற்றோர் குழந்­தை­க­ளுடன் அதிக நேரம் செல­விட வேண்டும். குழந்­தை­க­ளுக்கு இரண்­டரை வயது ஆகும் போதுதான், இப்­ப­ழக்கம் பற்றி தாய், தந்தை, குழந்­தை­யிடம் பேச வேண்டும்.

அவர்­க­ளிடம் நம்­பிக்கை உண்­டாக்கி, அவர்­க­ளுக்கே தெரி­யாமல் இப்­ப­ழக்­கத்தை மாற்ற வேண்டும். பெற்றோர் தங்கள் மன அழுத்­தத்தை குழந்­தை­க­ளிடம் வெளிப்­ப­டுத்தக் கூடாது.

3-–4 வயது வரை சொல்­லியும் புரி­ய­வில்லை என்றால், விரல் சூப்பும் பழக்கம் உடைய குழந்­தை­களைக் கண்­டிப்­பாக உள­வியல் நிபு­ண­ரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

3 வய­துக்கு மேல் விரல் சூப்பும் பழக்­கத்தை வள­ர­விட்டால் குழந்­தைகள் இப்­ப­ழக்­கத்­துக்கு நிரந்­த­ர­மாக அடி­மை­யா­கி­வி­டு­வார்கள்.

விரல் சூப்பும் பழக்கம் உடைய குழந்­தை­க­ளுக்கு முன்­வ­ரிசை பல் (Incisor teeth) முறை­யாக வள­ராது. அவற்றின் வடிவம் சரி­யாக இருக்­காது. முன்னும் பின்­னு­மாக மாறி மாறி வளரும்.

விரல்கள் சுத்­த­மாக இருக்காது. அவற்றை வாயில் வைக்கும்போது, கிருமிகள் வயிற்றினுள் போகும்.

இதன் காரணமாக, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தொற்றுநோய் வரலாம். எனவே, இப்பழக்கம் உடைய குழந்தைகளின் மனதை பெற்றோர் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல