ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

நிழ­லாக மனி­தனை தொடரும் மரணம்



இறப்பின் வகை­தொகை பற்­றிய ஓர் இல­கு­வான ஆய்வு

உயி­ருள்ள ஒரு ஜீவ­ரா­சியின் அனை த்துச் செயற்­பா­டு­களும் முடி­வுக்கு வரு­வதே மரணம் எனப்­படும். பல்­வேறு கார­ணங்­களால் நாௌான்றுக்கு உல­க­மெங்கும் சுமா­ராக ஒன்­றரை இலட்சம் பேர் இறக்­கின்­றனர் என்­பதும் மனித இனம் தோன்­றி­ய­தி­லி­ருந்து இது­வரை 100பில்­லியன் பேர் வரை இறந்­தி­ருக்­கின்­றனர் என்­பதும் உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் கணக்கு. பொது­வாக மரணம் நிகழ்ந்த பிறகு சுவாசம் நின்று விடும். உள்­ளு­றுப்­புகள் செய­லி­ழந்­து­விடும். நாடித்­து­டிப்பு இருக்­காது. உடல் வெளுத்­துப்­போகும். உடலின் கீழ்ப்­ப­கு­தி­களில் இரத்தம் சேர்­வது,விறைத்துப் போவது ஆகி­யன படிப்­ப­டியாய் நிகழும். முதுமை, தொற்­று­நோய்கள், மார­டைப்பு, விசக்­கடி, மிரு­கங்­களின் தாக்­குதல், விச ஜந்­துக்­களின் தீண்­டுதல், இயற்­கையின் சீற்­றத்தால் நிகழும் பேர­ழி­வுகள், போர்கள், கொலைகள், தற்­கொ­லைகள் போன்­றவை மரணம் நிகழப் பொது­வான கார­ணங்­க­ளாகும்.



உலகில் பெரும்­பா­லான மக்­களின் மர­ணத்­துக்குக் கார­ண­மான ஜீவ­ரா­சிகள் ஈயும் நுளம்பும்.14ஆம் நூற்­றாண்டில் ஐரோப்­பிய சனத்­தொ­கையில் கால்­வாசிப் பேருக்கு மேல் பலி­யா­னது பிளேக் என்ற கொள்ளை நோயினால் ஆகும். இது எலி­க­ளி­லி­ருந்து தெள்ளுகள் மூலம் மனி­த­னுக்குப் பரவுவது இந்நோய் தான். இந்­தி­யாவை ஆங்­கி­லேயர் ஆண்ட காலத்தில் கல்­கத்­தாவில் அசுர வேகத்தில் பரவி பத்து இலட்சம் பேருக்கு மேல் கொன்­றது.

கடந்த 20 ஆம் நூற்­றாண்டில் புகை­பி­டிக்கும் பழக்­கத்­தினால் பத்துக் கோடிப் பேர் வரை மர­ண­ம­டைந்­தி­ருக்­கி­றார்கள். இதுவே இந்த நூற்­றாண்டில் நூறு கோடி­ய­ள­வுக்கு உய­ரு­மென உலக சுகா­தார ஸ்தாபனம் எச்­ச­ரிக்­கின்­றது. மர­ண­ம­டைந்­த­தாக தவ­று­த­லாகக் கரு­தப்­பட்டு, இடு­காட்­டுக்கு எடுத்துச் செல்லும் வழியில் உடல் அசை­வதைப் பார்த்து திரும்ப வீட்­டுக்குக் கொண்­டு­வந்த சம்­ப­வங்­களும் நடந்­தி­ருக்­கின்­றன.மர­ண­ம­டைந்­தோரைப் புதைப்­பதும் எரிப்­பதும் பொது­வான நடை­மு­றைக ௌன்றாலும் திபெத்­தி­யர்கள் sky Burial என்ற முறையைக் கையாண்டு இறந்­தோரின் சட­லங்­களை மலை­யுச்­சி­களில் கொண்டு போய் வைத்து, அங்கு விலங்­கு­க­ளுக்கும் பற­வை­க­ளுக்கும் இரை­யாக்­கு­கின்­றனர். இந்­தி­யா­வி­லுள்ள பார்ஸி இனத்­த­வர்­க­ளி­டை­யேயும் இறந்­த­வர்­களின் உடல்­களை பற­வைகள் உண்­ணு­மாறு உயர்ந்த இடங்­களில் வைக்கும் பழக்­கமும் இருந்­து­வந்­துள்­ளது.

போர்­ணியோ என்­பது இந்­தோ­னே­சி­யா­வி­லுள்ள ஒரு தீவு.இங்கு இறந்­த­வர்­களை உட­ன­டி­யாகப் புதைக்க மாட்­டார்­களாம். சுமார் ஓராண்­டு­காலம் சட­லங்­களை சாடி­களில் பதப்­ப­டுத்தி வைத்­தி­ருந்து பிறகு தான் அடக்கம் செய்­வார்­களாம். இந்த வழக்கம் கடந்த நூற்­றாண்டின் இறுதி வரை அங்கு நடை­மு­றையில் இருந்து இப்­போது மாறி­விட்­டதாம். அந்­தக்­கால எகிப்­தி­யர்கள் இறந்த மன்­னர்­களின் சட­லங்­களை பதப்­ப­டுத்தி மம்­மி­க­ளாக்கி ஏரா­ள­மான பொன்­னையும் பொரு­ளையும் அடி­மை­க­ளையும் அவை­க­ளுடன் சேர்த்து பிர­மிட்­டு­களில் சமா­தி­யாக்­கி­னார்கள். இறந்­த­வர்­க­ளு­டைய ஆவி­யா­னது போய்ச் சேரு­கிற மறு உல­கிலும் சௌக­ரி­ய­மாக வாழட்டும் என்ற எண்­ணத்தில் இதனைச் செய்­த­னராம். இப்­படி ஏரா­ள­மான மம்­மிகள் 19ஆம் நூற்­றாண்டில் அங்கு சேர்ந்து விட்­டதால் அவை­க­ளுடன் சேர்த்துப் புதைக்க பொன் பொருள் போதாமல் அவை­களை நெடுநாள் பதப்­ப­டுத்தி வைத்­தி­ருந்து நிலக்­க­ரிக்குப் பதி­லாக ரயில் எஞ்­சின்­க­ளுக்குப் பாவித்­த­னராம்.

சில சித்­தர்கள் உயி­ருடன் சமாதி நிலையை அடை­வார்கள். அதனை ஜீவ­ச­மாதி என்பர். இந்­தி­யாவில் ஆதி­சங்­கரர், ராக வேந்­திர சுவா­மிகள், காஞ்சி மகா சன்­னி­தானம் சங்­க­ராச்­சா­ரிய சுவா­மிகள், இலங்­கையில் சித்­தானைக் குட்டிச் சுவா­மிகள் போன்றோர் இவ்­வாறு ஜீவ­ச­மா­தி­யா­னார்கள்.தமி­ழக அறிஞர் கி.ஆ.பெ விஸ்­வ­நாதம் தான் உயி­ருடன் இருக்கும் போதே தமது சமா­தியை கட்டி வைத்தார். சுபாஷ் சந்­தி­ரபோஸ் இன்­னமும் மர­ண­ம­டை­யாது வாழ்­கிறார் என்று சொல்­வா­ரு­முண்டு. மர­ண­மில்லாப் பெரு வாழ்வு வள்­ள­லா­ருக்குக் கிட்­டி­ய­தாகக் கூறு­வார்கள். TURRITOSIS NUTRICULA என்ற ஜெல்லி மீன்வகை மர­ணத்தை வென்­ற­தாக கலைக்­க­ளஞ்­சி­யத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இம்மீன் இனத்தின் கரு முட்­டைகள் சளி போன்றதொரு திரட்­சி­யாக ஏரி­க­ளை­யொட்­டிய பாறை­களில் பாசி படர்ந்தாற் போல் ஒட்டிக் கொண்­டி­ருக்கும். இவை முதிர்ச்­சி­ய­டைந்த ஒரு கால­கட்­டத்தில் ஒவ்­வொன்றும் ஒன்­றுக்கு இரண்­டாக, பத்­தாக,நூறாக,ஆயி­ர­மாகப் பிரிந்து,அனைத்தும் ஒரே கூட்­ட­மாக (COLNY) விருத்­தி­யுறும் சரி­யான பருவம் (SEASON) வந்­ததும் அவ்­வ­ளவும் சடு­தியில் வளர்ந்து ஜெல்லி மீன்­க­ளாக மாறும். பின்னர் அவை இனப்­பெ­ருக்­கத்தில் ஈடு­பட்டு குஞ்­சு­களை உற்­பத்தி செய்யும். மற்ற ஜெல்லி மீன்­க­ளுக்கும் இவற்­றுக்­கு­முள்ள வேறு­பாடு யாதெனில் இவை மீண்டும் உயி­ரற்ற சளித்­தி­ரட்சி போலாகி பாறை­களில் படர்ந்து விடு­வது தான். இவ்­வி­த­மாக ஒரு காலத்தில் சளித் திர­வ­மா­கவும் பின்னர் ஜெல்லி மீன்களாகவும் மாறுவதால் இவற்றை சாகாவரம் பெற்ற ஜெல்லி மீன்கள் IMMORTAL JELLIFISH என்­கி­றார்கள்.

MENTIS RELIGIOSA என்­பது ஒரு வகை­யான பூச்­சி­யினம். பிற பூச்­சிகள் தான் இதற்கு ஆதாரம். இனப்­பெ­ருக்­கத்­துக்­காக தன் இனத்து ஆண் பூச்­சி­யுடன் புணர்ந்த பிறகு அத­னையே கொன்று தின்று விடுமாம். இறப்­புக்குப் பின்னர் என்ன ஆகும் என்­பது பற்றி பல­வித கருத்­துக்கள் உல­வு­கின்­றன. தான் செய்த பாவ புண்­ணி­யங்­க­ளுக்­கேற்ப மனிதன் மறு­பி­ற­வி­ய­டைவான் என்­கி­றது இந்து மதம். இறப்­புக்குப் பின்னர் உயிர்த்­தெ­ழுதல் உண்டு என்று நம்­பு­கி­றது கிறிஸ்­தவ மதம் இயேசு அவ்­வி­தமே உயிர்த்­தெ­ழுந்தார் என்று கூறும் புனித விவிலியம் உலகின் இறுதி நாளின் தீர்ப்புக்காக இறந்தோர் அனை­வரும் ஆன்ம சரீ­ரத்­துடன் உயிர்த்­தெ­ழுவர் என்றும் அப்­போதே அவ­ரவர் செய்த பாவ புண்­ணி­யங்­க­ளுக்­கேற்ப மோட்­சமோ நர­கமோ சம்­பா­வ­னை­யாகக் கிடைக்கும் என்றும் கூறு­கின்­றது. பாவத்தின் சம்­பளம் மரணம் என்­பதும் விவி­லி­யத்தின் இன்­னொரு வாசகம். வாழ்வில் கொலை, கொள்ளை, மோசடி, ஒழுக்­கக்­கேடு என்று வகை தொகை­யின்றி பாவங்­களைச் செய்து கொண்டே போனால் கடை­சியில் தண்­ட­னை­யா­கவோ, வியா­தி­யா­கவோ, விபத்­தா­கவோ மரணம் வந்து சேரு­மென்­பதே இதன் பொரு­ளாகும்.

மேல் நாடு­களில் FUNERAL MANAGERS என்­ப­வர்­க­ளிடம் பொறுப்பை ஒப்­ப­டைத்­து­விட்டால் போதும் மர­ண­ம­டைந்­த­வரின் ஈமக்­கி­ரி­யைகள் உள்­ளிட்ட அனைத்துப் பணி­க­ளையும் அவர்­களே கச்­சி­தமாய் நிறை­வேற்றி வைப்­பார்கள். நம் நாட்­டிலும் FUNERAL UNDERTAKERS என்ற மலர்ச்­சா­லைகள் சேவைக்கு வந்­து­விட்­டன. இறந்­த­வ­ருக்­காக அழு­வ­தையும் இரங்­க­லுரை நிகழ்த்­து­வ­தையும் உற­வி­னர்­களும் நண்­பர்­களும் செய்தால் போதும். பணம் வாங்­கிக்­கொண்டு இறந்­த­வ­ருக்­காக அழு­வ­தற்கும் ஆட்கள் இருக்­கின்­றார்கள். இவ்­வாறு கூலிக்கு மார­டிப்­ப­வர்கள் யாழ்ப்­பா­ணத்துக் கிரா­மங்­களில் இன்றும் உள்­ளனர். உற்றார் உற­வி­னர்­களே வியக்கும் வண்ணம் ஒரு­வ­ரை­யொ­ருவர் கட்­டிக்­கொண்டும் மார்­பிலும் வயிற்­றிலும் அடித்துக் கொண்டு ஊர் கேட்க ஒப்­பாரி வைத்து அழு­வார்கள்.

அமெ­ரிக்­காவில் இறந்­து­போன ஒரு­வரின் சொத்­துக்­களை இன்­னொ­ரு­வ­ருக்கு மாற்­று­வ­தற்கு வரி­வி­திக்­கப்­ப­டு­கின்­றது. இதனை மரண வரி என்­கி­றார்கள். மரணம் நிகழ்ந்­த­வுடன் அதனை பதிவு செய்­வது அவ­சியம்.இது வாரி­சு­களின் சட்­ட­பூர்­வ­மான உரிமை, பின்­னு­ரித்து போன்­ற­வற்­றிற்குத் தேவைப்­படும் முக்­கி­ய­மா­ன­தொரு சான்­றி­த­ழாகும். காணாமல் போன ஒரு­வரைப் பற்றி குறிப்­பிட்ட சில ஆண்­டுகள் வரை எந்தத் தக­வல்­களும் வர­வில்­லை­யென்றால் அதன்­பி­றகு அவர் இறந்­த­வ­ரா­கவே கரு­தப்­ப­டுவார் என்று சட்டம் சொல்­கின்­றது. இதனைக் காரணம் காட்­டியே கடந்த அர­சாங்கம் வன்னிப் போரின் போதும் சுற்றி வளைப்­பு­களின் போதும் கைதாகி காணாமல் போன உற­வு­களை தேடித் தரு­மாறு யாழ்ப்­பா­ணத்தில் ஆர்ப்­பாட்டம் செய்த மக்­க­ளுக்கு அதிரடியாய் மரணச் சான்றிதழ்களை வழங்கி அப்பிரச்சினைக்கு அத்துடன் முடிவு கட்ட முயன்றமை மறக்கக் கூடிய விடயமல்ல!

மர­ணத்தைத் தடுக்க முடி­யாது. ஆனால் அது நிகழ்­வதை தள்ளிப் போட முடியும்.சரி­யான உணவுப் பழக்கம், உரிய மருத்­துவப் பரி­சோ­தனை,தகுந்த முறை­யி­லான சிகிச்சை,தவ­றாத உடற்­ப­யிற்சி, மன­நலம்,தீய பழக்­க­வ­ழக்­கங்­களோ,ஒழுக்கக் கேடு­களோ இல்­லா­தி­ருப்­பது போன்­றவை மர­ணத்தை சில காலம் ஒத்­திப்­போ­டச்­செய்யும் சில வழி­மு­றை­க­ளாகும் .

மரணம் என்று பொருள்­தரும் இரு­நூற்­றுக்கும் அதி­க­மான வார்த்தைப் பிர­யோ­கங்கள் ஆங்­கி­லத்தில் உள்­ளன. KICKED THE BUCKET என்­பது அவை­க­ளி­லொன்று. தமி­ழிலும் கண்ணை மூடி விட்டார், காலை நீட்­டி­விட்டார், மோசம் போய்­விட்டார்: மேலே போய்­விட்டார். என்­றெல்லாம் சொல்வது வழக்கத்தில் உள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல