ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

தோட்டத் தொழிலாளர்களை கடனாளிகளாக்கும் அடகு நிறுவனங்கள்

சுமார் இரு நூறு வரு­டங்­க­ளுக்கு முன்னர் இந்­திய தேசத்திலிருந்து இலங்கைத் தீவிற்கு கூலித்­தொ­ழி­லா­ளி­க­ளாக அடிமை இன­மாக ஆங்­கி­லே­யர்­களால் நாம் கொண்டு வரப்­பட்டோம்.

எமது ஏழ்­மை­யையும் வறு­மை­யையும் தமக்கு சாத­க­மாகப் பயன்­ப­டுத்­திக்­கொண்ட ஆங்­கி­லே­யர்கள் எம்மை இலங்­கைத்­தீவின் கோப்பி, தேயிலை, கொக்கோ தோட்­டங்­களில் காற்­றோட்­ட­மில்­லாத லயன் காம்­பி­ராக்­களில் முடக்கி எமது வாழ்வை உழை ப்பை, நெற்றி வியர்­வையை, எமது உதிர த்தை எமது ஊதி­யத்தை எல்லாம் கப­ட­மாக கொள்­ளை­ய­டித்­தனர்.



அந்த சோகக்­கதை எல்லாம் தற்­போது பழங்­க­தை­யாகி நாம் மறந்தும் மரத்தும் போய்­விட்டோம். எமது விசு­வா­ச­மான உழைப்பு, உண்மை, நேர்­மை­யான மனப்­பா ங்கு, கடு­மை­யான முயற்­சியின் மூல­மாக நாம் தற்­போது வெற்­றி­யா­ளர்­க­ளாக தலைநிமிர்ந்து நிற்கும் அளவு உயர்ந்து விட் டோம்.

இது எமக்கு சற்று நிம்­ம­தி­ய­ளிக்கும் நிலை­யாகும். தற்­போது நம்­ம­வர்கள் வியா­பா­ரி­க­ளாக, வாகன உரி­மை­யா­ளர்­க­ளாக சொந்த காணி வீடு உள்­ள­வர்­க­ளாக மேலும் அரச தனியார் துறை­களில் உயர் அதி­கா­ரி­க­ளாக பதவி வகித்து வரு­வது எமது சமூக வளர்ச்சி மேம்­பாட்­டுக்கு ஒரு தெம்பை ஊட்­டு­வ­தாக உள்­ளது.

மலை­யக சமூ­கத்தின் முன்­னேற்­றத்­தையும் வளர்ச்­சி­யையும் தடுப்­ப­தற்கும் வளங்­களை சுரண்­டு­வ­தற்கும் அவர்­களை மேலும் மேலும் கட­னா­ளி­யாக்­கு­வ­தற்கும், பல தனியார் நிறு­வ­னங்­களும், தனியார் வர்த்­த­கர்­களும் வட்­ட­மி­டு­வதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. அவ­சர தேவை­க­ளுக்கு பணத்தை பெற்று கொள்­வ­தற்கும் தங்க நகை­களை அட­மானம் வைக்கவும் அரு­கி­லுள்ள தனியார் அட­குச்­சே­வை­யா­ளர்­க­ளையும், அடகு நிறு­வ­னங்­க­ளையும் நாடி செல்­கின்­றனர் நம் மக்கள். குறித்த நிறு­வ­னங்­களும் நகையின் பெறு­ம­திக்கு ஏற்ப பணத்தை கொடுக்­கின்­றன.

அரச வங்­கி­களில் தங்க நகை­களை அட­மானம் வைக்க செல்லும் பொழுது குறைந்த அள­வான பணமும் சில சட்ட திட்­ட­டங்­க­ளுக்கும் கட்­டுப்­பட வேண்­டி­யுள்­ளதால் பலர் அரச வங்­கி­க­ளுக்கு செல்­வ­தில்லை. ஆனால் இதன் பாதிப்பை பலர் அறி­யா­த­வர்­க­ளாக இருக்­கின்­றனர்.

அரச வங்­கி­களில் தங்க நகை ஒன்றை சுமார் 1000 ரூபா­வுக்கு அடகு வைத்தால் வருட இறு­தியில் வட்­டியும் முத­லு­மாக சுமார் 1150 ரூபாவை செலுத்தி நகையை மீட்டு விடலாம்.

ஆனால் தனியார் அட­குச்­சேவை நிலை­யங்­களில் தங்க நகை­களை அடகு வைக்கும் போது 1000 ரூபா­வுக்கு நகையை அடகு வைத்தால் நகை அடகு வைக்கும் போதே முதல் மாத வட்டி பணத்தை எடுத்து கொள்­வார்கள். மேலும் ஒரு வரு­டத்தின் பின் நகை­களை மீட்கும் போது வட்­டியும் முத­லு­மாக 1000 ரூபாய்க்கு 1500 ரூபா வரை செலுத்த வேண்­டிய நிலை ஏற்­ப­டு­கின்­றது.

இரண்டு வரு­டங்­க­ளுக்குள் திருப்­பாது விட்டால் வட்­டிக்கும் வட்டி சேர்க்­கப்­பட்டு இறு­தியில் நகைகள் கிடைக்­காத நிலைமை ஏற்­ப­டு­கி­றது. ஆனால் அரச வங்­கி­களில் அட­மானம் வைக்­கப்­படும் தங்க நகை­க­ளுக்கு இவ்­வா­றான நிலைமை ஏற்­ப­டு­வ­தில்லை. அரச வங்­கி­களில் அடகு வைக்கும் நகை­க­ளுக்கு போதிய ஈட்டுக் கடன் கிடைக்கா விட்­டாலும் குறைந்த வட்டி வீதம், மீண்டும் நமது நகை­க­களை பெற்­றுக்­கொள்ளும் உத்­த­ர­வாதம் உள்­ளது. அடுத்தபடி­யாக பலர் வாகனம் ஒன்றை வைத்­தி­ருப்­ப­தற்கு விரும்­பு­வது இயற்கை.

அதற்­காக வருடக் கணக்கில் சேமித்து சுமார் 10 லட்சம் வரை கையில் வைத்­துக்­கொள்­கின்­றனர். பின் தனியார் நிதி நிறு­வ­னங்­க­ளிடம் சென்று மேலும் 20 லட்சம் ரூபாய் கடன் பெற்று (finance) வாக­னத்தைப் பெற்றுக் விடு­கின்­றனர். இதற்கு மாதாந்தம் வட்டி 24% முதல் 30% வரை. கணக்­கிட்டுப் பார்க்கும் போது மாதம் 50ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை நிதி நிறு­வ­னத்­திற்கு செலுத்த வேண்டும்.

இவ்­வாறு மூன்று மாதம் தவணைப் பணம் செலுத்தத் தவறும் பட்­சத்தில் நிதி கடன் வழங்கும் நிறு­வ­னங்கள் (finance company) வாக­னத்தை பல­வந்த­மாக எடுத்துச்சென்றுவிடு­வார்கள். அதன் பின் எந்தக் கொடுப்­ப­னவும் உங்­களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. நீங்கள் வாக­னத்­திற்கு முத­லிட்ட 10லட்சம் ரூபாவும் அதோ­க­திதான்.

பின் வாகன ஆசை நட்­டத்தில் தோல்­வி யில் முடிந்து விடும். அத்­தோடு பலர் மனம் உடைந்து வாழ்க்­கையில் விரக்­தி­யுற்று குடி­கா­ர­ராக, மன நோயா­ளர்­க­ளாக மாறி ஈற்றில் வாழ்க்­கையை இழந்த சோகக் கதை­களை நாம் கண்டும் கேட்டும் இருக்­கின்றோம்.

ஆனால் சில கட்­டுப்­பா­டு­க­ளு­டனும் சிர­மங்­க­ளுக்கும் மத்­தியில் அரச வங்­கி­களில் வாக­னத்­துடன் பெற்றுக் கொள்ளும்போது குறைந்த வட்டி விதத்தில் கடன் பெற்றுக் கொள்ள முடியும்.

வீட்டு உறு­திப்­பத்­திரம், காணி உறு­திப்­பத்­திரம் அல்­லது அரச உத்­தி­யோ­கஸ்­தர்­களின் பிணையின் மூலம் அரச வங்­கி­களில் வாக­னக்­கடன் வியா­பா­ரக்­கடன் சிறு கடன் மனை திருத்த புதிய மனை நிர்­மா­ணிக்க கடன் பெறலாம். கடனை குறைந்த வட்­டியில் நீண்ட தவ­ணையில் பெற்றுக் கொள்ள முடியும்.

நிறு­வ­னங்­களின் மூல­மாக எம்­மைத்­தொ­டர்­கின்­றன. ஆயுள் காப்­பு­றுதி என்ற போர்­வையில் எம்மை ஏமாற்றி அவ்­வ­ளவு பணம் கிடைக்கும் இவ்­வ­ளவு பணம் கிடைக்கும் என்று எம்மை ஏமாற்றிக் காப்­பு­றுதி செய்­யத்­தூண்­டுவர்.

முறி முதிர்ச்­சி­ய­டைந்து நாம் தொகை யைக் கோரும் போது நாம் செலுத்­தி­யதை விடக் குறை­வா­கவே எமக்குக் கிடைக்கும் காரணம் கேட்டால் இது ஆயுள் காப்­பு­றுதி ஆயு­ளுக்கு ஏதா­வது இடை­யூறு ஏற்­பட்டால் மாத்­தி­ரமே முழு­மை­யாக கிடைக்கும் என்று கூறி எம்மை ஏமாற்­றுவர். செத்­தபின் கைலா யம் செல்ல விரும்­பு­வது போன்­றதே ஆயுள் காப்­பு­று­தி­யாகும்.

காப்­பு­றுதி நிறு­வ­னங்கள், தோட்ட நிரு­வா­கிகள், இலி­கிதர், ஏனைய மேலா­ளர்­க­ளுக்கு போனஸ் சலு­கைகள் வழங்கி தோட்டத் தொழி­லா­ளர்­களைக் காப்­பு­றுதி செய்யத் தூண்­டு­மாறு கட்­டளை இடச் செய்வர். காப்­பு­றுதி செய்­வதை விட காணி, தங்கநகை போன்­ற­வற்றில் முதலீடு செய்வது லாபம் அளிப்­ப­தாகும். மது விற்­பனை நிலையங்­களைப் பற்றி நாம் நினை­வூட்டத் தேவை­யில்லை. தற்­போது தொடர்ச்சியாக அதன் தாக்கம் பற்றிப் பேசப்ப­டு­கின்­றது.

எமது தாய்­மார்கள் வீதிக்கு இறங்கி மதுச்­சா­லை­களை மூட நட­வ­டிக்கை மேற்­கொள்­வது பாராட்­டத்­தக்­க­தாகும். மேலும் தோட்ட மதுச்­சா­லைகள் பல எமது அர­சியல் தலை­வர்­க­ளி­னா­லேயே நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்­றன என்பதை எமது மலையகக் குழந்தைகள் கூட நன்கு அறியும்.

மதுச்­சா­லை­களை ஒழிக்க பாரா­ளு­மன்­றத்­திலும் குரல்கள் ஒலிக்­கின்­றன. ஆகவே மலை­ய­கத்தில் வாழும் படித்த இளைஞர் யுவ­திகள், ஆசி­ரி­யர்கள், கல்விச் சேவை­யா­ளர்கள் இயன்­ற­வரை எமது மக்­க­ளுக்கு தெளி­வூட்ட வேண்டும். இயன்ற ஆலோ­ச­னை­களை வழங்க வேண்டும்.

எம்மில் அக்கறையுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக நிலையங்கள் எமது மக்களின் வாழ்வு மேம்பாட்டுக்கு உழைக்க வேண்டும் என நாம் தாழ்மையாகக் கேட் டுக் கொள்கின்றோம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல