ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

கூட்டமைப்பை பதிவு செய்ய புலிகளின் பாணியில் மிரட்டல் - விட்டுக்கொடுக்காது மறுத்தார் மாவை எம்.பி

சுவிற்சர்லாந்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளிற்கிடையல் இணக்கத்தை ஏற்படுத்தி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

இப்போதைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும் எண்ணமில்லை என மாவை சேனாதிராஜா அங்கு வைத்துத் தெரிவித்துள்ளார்.



கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை மென்மையாக வைத்தவர்கள் படிப்படியாக தொனியை அதிகரித்து புலிகளின் பாணியில் மிரட்டல் விடுத்த போதும், மாவை எம்.பி. அசைந்து கொடுக்கவில்லை. கூட்டமைப்பை பதிவு செய்தால் அதிலுள்ள கட்சிகளுடன் இணக்கமாக வேலைகளை நகர்த்தி செல்ல முடியாதென அவர் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் தமிழரசுக் கட்சியின் ஏகபோகம் அதிகரித்த நிலையில் ஏனைய கட்சிகள் புறக்கணிக்கப்பட தொடங்கியதும், கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றது.

எனிலும் பல வருடங்களாக இந்த கோரிக்கையை தமிழரசுக் கட்சி கண்டு கொள்ளாமலிருந்தது. இந்த நிலையில் வடக்கு முதல்வரின் திடீர் எழுச்சியின் பின்னரான சூழலில், தமிழரசுக் கட்சியின் இருப்பிற்கு ஆபத்து நிகழலாமென்ற பரவலாக அபிப்பிராயங்கள் எழத் தொடங்கியதும், கூட்டமைப்பு கட்சிகளிற்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு தமிரசுக் கட்சி தயாரென அறிவித்தது. படிப்படியான செயற்பாடுகளின் பின்னர் கூட்டமைப்பை பதிவு செய்யவும் தயாரென அறிவித்தது.

இந்த நிலையில் சுவிஸிலுள்ள தமிழர் அமைப்பொன்றின் ஊடாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலுள்ள கட்சிகளிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. உள்நாட்டில் கூட்டமைப்பினருக்கு சட்டச் சிக்கல் ஏற்படாதிருக்க அந்த அமைப்பினூடாக தற்போது இயங்கு நிலையிலுள்ள விடுதலைப் புலி செயற்பாட்டாளர்களே இந்த ஏற்பாட்டை செய்திருந்தனர். கலந்துரையாடலிற்கு செல்பவர்களின் பயண மற்றும் தங்குமிட செலவுகளையும் அவர்களே ஏற்றுக்கொண்டனர்.

கூட்டம் திட்டமிட்ட நேரத்தில் ஆரம்பமான போதும், மாவையின் போக்குவரத்து சிக்கலால் அவர் இரண்டு மணித்தியாலங்கள் கழித்தே கூட்டத்திற்கு சென்றிருக்கிறார்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பதிவின் அவசியத்தை மிக மென்மையாக முன்னர் விடுதலைப்புலிகளின் தீவிர அரசியல் செயற்பாட்டாளராக இருந்த ஒருவர் புரிய வைத்தார். எனினும் அதற்கு மாவை மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் இரண்டு தரப்பிற்குமிடையில் தர்க்கம் ஆரம்பமானது.

கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டுமென அவர்கள் உறுதியான நிலைப்பாட்டில் இருந்ததால், தமது இறுக்கத்தை படிப்படியாக அதிகரித்து, மாவையை வற்புறுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமென மிரட்டல் பாணியில் கூறியுள்ளனர்.

இதனால் அலமலந்துபோன மாவை, என்ன நீங்கள் இப்பிடி கதைக்கிறியள்?... தலைவர் கூட என்னோட இப்பிடி கதைச்சதில்லை என முறையிட்டுள்ளார்.

இறுதியில், தமிழத் தேசிய கூட்டமைப்பை இப்போதைக்கு பதிவு செய்யும் எண்ணமில்லை. கூட்டமைப்பை பதிவு செய்யுமாறு உருவாக்கியபோதே சொல்லவில்லை. அதனால் உங்கள் தலைவர் வந்து சொன்னாலும் பதிவு செய்யும் திட்டமில்லையென மாவை அடித்து கூறிவிட்டார். இது பற்றி இறுதி முடிவெடுப்பதானால் கட்சியுடன் கலந்தாலோசித்துத்தான் முடிவெக்க வேண்டுமென்றார்.

தினகரன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல