இவ்வகையான துளைகள் தொப்புளிலேயே சற்றுப் பெரிதாக ஆனால் வெளியே தெரியாத அளவிற்குப் போடப்படும். இதனால், சிகிச்சை செய்யப்பட்டதற்கான அடையாளமே தெரியாது.
‘லெப்ரஸ்கோப்பி’ என்ற வார்த் தையை இன்று பலரும் கேட் டிருப்பர். ஆனால், லெப்ரஸ்கோப்பி என் றால் என்ன, அதன் மூலம் என்னென்ன சிகிச்சைகளைச் செய்யலாம் என்பது பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்காது. இங்கே, லெப்ரஸ்கோப்பி பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தைத் தருகிறார் லெப்ரஸ்கோப்பி நிபுணர் டொக்டர் பாலாஜி ரவில்லா பாஸ்கரன். இவர், சென்னை ‘நோபல் மருத்துவமனை’யின் மருத்துவ இயக்குநராவார்.
லெப்ரஸ்கோப்பி என்பது வயிற்றுப் பகுதிகளில் தேவைப்படும் பல்வேறு சிகிச் சைகளைச் செய்வதற்கான ஒரு நவீன தொழில்நுட்பம். ஆனால், வயிறு தவிர்ந்த இன்னும் சில உள்ளுறுப்புகளுக்கும் தற் போது லெப்ரஸ்கோப்பி உதவுகிறது.
பாரம்பரிய சத்திர சிகிச்சைகளின்போது, உடலை பதினைந்து சென்றிமீற்றர் வரை பிளக்கவேண்டியிருந்தது. லெப்ரஸ்கோப்பி சிகிச்சையின்போது, ஒரு மில்லி மீற்றர் அளவிலான சிறு துளை இட்டாலே போதுமானது.
இந்தத் துளை வழியே குறிப்பிட்டளவு காற்றழுத்தம் செலுத்தப்படும். இதனால், தோலும் சதையும் மேற்புறமாகவும் உள் ளுறுப்புகள் கீழ்ப்புறமாகவும் விலகி ஒரு வழியை உருவாக்கும். இந்த வழியின் ஊடாக, ஒரு மெல்லிய குழாயின் உதவி யுடன் சிறு ஒளிப்பதிவுக் கருவி ஒன்று உடலினுள் செலுத்தப்படுகிறது. அதன் மூலம் கிடைக்கும் காட்சிகளை, வெளியே இருந்து சின்னத் திரை மூலம் தெளிவாகப் பார்க்க முடியும்.
அடுத்ததாக, ஏற்கனவே இடப்பட்ட துளைக்கு இருபுறங்களிலும் குறைந்தது இரண்டு முதல் நான்கு துளைகள் வரை இடப்பட்டு, அதன் வழியாக மெல்லிய உபகரணங்கள் உட்செலுத்தப்படுகின்றன. இந்த உபகரணங்கள் மூலமே ஏனைய உள்ளுறுப்புக்களை ஒதுக்கி, சிகிச்சை தேவைப்படும் உறுப்பைத் தெளிவாக அடையாளம் கண்டு சிகிச்சைகள் செய்யப் படுகின்றன.
இந்த நுட்பம் சற்றுச் சிக்கலானது தான் என்றாலும், பாரம்பரிய சிகிச்சைகளின் போது, நமது கைவிரல்களால் சில நுண்ணிய உடல் பாகங்களைத் தொட்டு சிகிச்சை அளிப்பதில் உள்ள சிரமங்களை இந்த சிகிச்சை முறை தவிர்த்திருக்கிறது
பெரும்பாலும், இவ்வகையான துளை கள் தொப்புளிலேயே சற்றுப் பெரிதாக ஆனால் வெளியே தெரியாத அளவிற்குப் போடப்படும். இதனால், சிகிச்சை செய்யப்பட்டதற்கான அடையாளமே தெரியாது. இதை ‘சிங்கிள் இன்ஸிஷன் லெப்ரஸ்கோப்பி சர்ஜரி’ என்று சொல்வோம். இதற்காகவென்றே சில பிரத்தியேகமான மருத்துவ உபகரணங்கள் உண்டு. இது மருத்துவர்களுக்கு சற்றே சிரமமான சிகிச்சைதான்.
இருந்தாலும் வெற்றிகரமாக முடிக்க முடியும். இவை தவிர வேறு பல வசதிக ளும் நன்மைகளும் லெப்ரஸ்கோப்பி சிகிச் சையில் உண்டு.
உடலைத் திறந்து செய்யும் சத்திர சிகிச்சைகளின்போது சிகிச்சைகள் முடித்த பின், தையல் போடப்படும். அதன் போது ஒரு முடிச்சேனும் சற்றுத் தளர்வாக இடப்பட்டாலும், செய்யப்பட்ட சிகிச்சை அர்த்தமற்றுப் போய்விடும். லெப்ரஸ்கோப்பியில் வெட்டப்படும் உள்ளுறுப்புப் பகுதிகள் தேவை முடிந்ததும் உடனுக்குடன் பொருத்தப்பட்டு விடுவதால் இந்த அபாயம் தவிர்க்கப்படுகிறது. மயக்க மருந்து கொடுக்கும் தேவையும் மிகையாகக் குறைந்து விடுகிறது.
அடுத்தது வலி.
பாரம்பரிய சிகிச்சையின் பின், நோயா ளிகள் இருமும்போதும், தும்மும்போதும் வலி மிகையாக இருக்கும். காரணம், மனிதனின் தோல் மற்றும் தசைநார்களே வலியை மிதமாக உணரக்கூடியவை. லெப்ரஸ்கோப்பி சிகிச்சையின்போது சுமார் மூன்று சின்னஞ் சிறு துளைகள் மட்டுமே இடப்படுவதால், அந்த மூன்று இடங்களில் மட்டுமே வலி உணரப்படும். சிகிச்சைகள் வேகமாக முடியும் அதேநேரம், சிகிச்சை முடிந்த பின் மருத்துவமனையில் அதிக நாட்கள் தங்க வேண்டிய தேவையும் நோயாளிகளுக்கு இருக்காது.
ஆண், பெண் இருபாலருக்கும் லெப்ரஸ்கோப்பி உகந்ததுதான் என்றா லும், பெண்களுக்கே இது மிகுந்த உதவியாக இருக்கிறது. கருப்பை, கருப்பைக் குழாய் போன்ற பகுதிகளில் பல வகையான கட்டிகள் தோன்றக்கூடும். இந்தக் கட்டிகள், அவை உண்டாகும் இடங்கள் மற்றும் அவற்றின் அளவு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ‘எண்டோமெட்ரியோசிஸ்’, ‘சொக்லட் சிஸ்ட்’ எனப் பல்வேறானவையாக இனங் காணப்படுகின்றன. அவ்வகையான கட்டிகளை அகற்றுவதற்கு மிகச் சிறந்தது லெப்ரஸ்கோப்பிதான்.
இன்னும் ‘எக்டோபிக்’ எனப்படும் கருக்குழாயில் கரு தங்கி உடைந்து போதல், தும்மும்போதும் இருமும்போதும் சிறு நீர் வெளியேறுதல் மற்றும் கருப்பை கீழிறங்குதல் போன்ற பிரச்சினைகளுக்கு லெப்ரஸ்கோப்பி ஒரு வரப்பிரசாதம். கருப்பை கீழே இறங்கியவர்களுக்கு அதை அகற்றாமல், மறுபடி மேலேற்றுவதையும் லெப்ரஸ்கோப்பி மூலம் செய்ய முடியும். அது மட்டுமன்றி, அதே உறுப்புகளில், பல்வேறு காரணங்களால் புற்றுநோய் தோன்றவும் வாய்ப்புள்ளது. இதன்போது, ரேடியோதெரபி என்ற கதிர்வீச்சுச் சிகிச்சையை செய்யும் பட்சத்தில், அவர்களுக்குக் குழந்தைப் பேறு நிரந்தரமாக இல்லாமல் போதல் உட்பட பல பிரச்சினைகள் உருவாகும். இவ்வாறானவர்களுக்கும் லெப்ரஸ்கோப்பிக் ஒரு சிறந்த தீர்வாக அமைந்திருக்கிறது.
ஓரிரு பெண்களுக்கு, பிறப்புறுப்பு பெரிதாகவோ அல்லது தளர்ந்தோ போயி ருக்கும். இவர்கள் ‘வெஜினோ பிளாஸ்ரி’ எனும் ஒரு வகை பிளாஸ்டிக் சிகிச்சையை செய்துகொள்வதன் மூலம் மீண்டும் அவ் வுறுப்பு இறுக்கப்படும்.
இப்படியாக தனித்துவமான உறுப்பு கள் பெண்களுக்கே இருப்பதால், ஒப்பீட்டு ரீதியாக ஆண்களை விடப் பெண்களுக்கே இந்த சிகிச்சை பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. தற்போது, லெப்ரஸ்கோப்பி ஒளிப்பதிவுக் கருவியின் முனையிலேயே ‘அல்ட்ரா சவுண்ட்’ வசதியும் இணைக்கப்பட்டுள்ளதால், பெண்களிடம் மட்டுமே தோன்றக் கூடிய பெரும்
பாலான நோய்களைத் தீர்க்கக்கூடிய வசதி அதிகரித்துள்ளது.
முன்பே குறிப்பிட்டது போல், வயிறு தவிர்ந்த சில உறுப்புகளிலும் லெப்ரஸ்கோப்பி உதவுகிறது.
முழங்கால் மூட்டுகளில் செய் யப்படும் ‘ஆர்த்ரோஸ்கோப்பி’ சிகிச் சையிலும், ஏனைய சில மூட்டு அறுவை சிகிச்சைகளிலும் லெப்ரஸ்கோப்பி பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, மூக்கில் செய்யப்படும் குறிப்பிட்ட சில சிகிச்சைகள் மற்றும் தைரொய்ட் பிரச்சினைகளுக்கும் லெப்ரஸ்கோப்பி துணை புரிகிறது.
இனிவரும் காலங்களில், தொண்ணூறு சதவீதமான சிகிச்சைகளுக்கும் லெப்ரஸ்கோப்பி உறுதுணையாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக