ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

பிரபாகரனை கொல்லக்கூடாது என்கிற இந்தியாவின் கொள்கை - இது மட்டும்தான் தோல்வி அல்ல

தயான் ஜயதிலகா – எழுத்தாளர் மற்றும் முன்னாள் தூதுவர்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினமாகிய ஏப்ரல் 14 ல் இந்தியாவின் ராய்ப்பூdr-dayan-jayatillekaரில் வைத்து ஜெனரல் வி.கே.சிங்கின் பகிரங்க விமர்சனமாக இந்திய அமைதி காக்கும் படை (ஐபிகேஎப்) பற்றிய அனுபவங்கள் மற்றும் அவரது அதிர்ச்சி தரும் வெளிப்பாடாக ஒன்றுக்கு மேற்பட்ட தருணங்களில் பிரபாகரனின் இருப்பிடம் பற்றிய தகவல்கள் ஐபிகேஎப் இற்கு கிடைத்திருந்த போதும் மேலிடத்தின் உத்தரவின் பிரகாரம்; அவர் பிடியில் இருந்து நழுவ விடப்பட்டார் என்கிற செய்தியும் அந்த வருடங்களைப் பற்றிய ஒரு மறுபரிசீலனையை ஆரம்பிக்கிறது.



ஐபிகேஎப் அதை முடித்திருக்கலாம் என்கிற வரிகள் மற்றும் வேலையை முடிப்பது என்பது உண்மையில் எல்.ரீ.ரீ.ஈ யினை தோற்கடிப்பதுதான் என்பதும் அதனை ஜனாதிபதி பிரேமதாஸ கண்டிப்பாக விட்டு விடும்படி உத்தரவிட்டார் என்பதும் - பல ஸ்ரீலங்கா வர்ணனையாளர்கள் மற்றும் பொதுப் பிரமுகர்கள் அறிந்திராத ஒரு கருத்து – அது ஐபிகேஎப் இனை சிக்கலான வலையில் மாட்டிவிட்டது என்று இந்தியாவின் வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் வி.கே.சிங் வழங்கியுள்ள வாக்குமூலம் பொய்யானது.

முக்கியமாக ஜனாதிபதி பிரேமதாஸ, பிரபாகரன் இருக்குமிடம் ஐபிகேஎப் இற்கு தெரியவந்ததும் அவரை பிடியில் இருந்து விட்டுவிடும்படி ஐபிகேஎப் இற்கு ஆணை வழங்கும் உயர் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை. முதலில் அது நடைபெற்ற சமயம் அவர் ஜனாதிபதியாகக் கூடத் தெரிவாகவில்லை. அது எம்.ஜி இராமச்சந்திரன் ராஜிவ் காந்தியிடம் அழுது முறையிட்ட அணுகுமுறை மற்றும் இந்திய நிறுவனத்தின் இரகசிய பிரிவில் இருந்த சில உயர் அதிகாரிகள் (பிரபாகரனின் அதே இனத்தை சோந்தவர்கள் ஆனால் அவரது சாதியோ, சொந்தமோ அல்லாதவர்கள்) பிரபாகரனை முடித்துவிட வேண்டும் என்று விரும்பிய டிக்ஸிற் மற்றும் கல்கட் போன்றவாகளிடம் அதற்கு எதிராக கடுமையாக வாதிட்டார்கள்.

பங்காளர் – பார்வையாளர்

அதில் ஒரு பங்காளியாகவும் பார்வையாளனாகவும் இருந்தவன் என்கிற வகையில் அரசியல் விஞ்ஞானியாக இருந்து ஆய்வாளனாகிய மாறிய நான் வரைந்த அடிப்படை பாடங்களை கீழ்கண்டவாறு தொகுத்துள்ளேன்:

மோதலுக்கான தீர்வில் மூன்றாவது நாட்டின்; முயற்சிகள் செயற்படும்போது அந்த நாடு சண்டையிடுபவர்களின் ஒரு பகுதியினரின் இனத்தின் தொகுதிகளை, பழங்குடியினரை, அல்லது குடியேற்றவாசிகளை தனது நாட்டில் கொண்டிருந்தால் அது முற்றிலும் அல்லது முதன்மையாக இத்தகைய தீர்வில் சார்ந்திருக்கக் கூடாது. அத்தகைய நாடுகள் சிலவேளை தன்னிச்சையாகவே அதற்குள் இழுக்கப்பட்டால் மற்றும் அதில் பங்குபற்றுபவர்களின் இடர்களுடன் மிகவும் கடினமான நோக்கத்துடன் ஒரு பாத்திரத்தை வகிக்கவேண்டி நேரிட்டால், இணை - இனங்கள் உட்பொதிந்துள்ள அத்தகைய குழுக்கள் ஒரு பூஜ்ய தொகையான சமயத்தில் மோதல் தீர்வுக்கான முயற்சிகளை பாழ்படுத்தி விடும், ஏனென்றால் இடைத்தரகரால் ஒரு நடுநிலையான நடுவராக தன்னை உணர முடியாது, மற்றும் அதில் ஒரு பின்னடைவு ஏற்படும். இலட்சிய ரீதியாக மத்தியஸ்தம் ஃ தலையிடும் நாடு செயற்பாடுகளில் ஈடுபடும்போது, மோதலில் எதுவித தொடர்பும் அற்றதாகவும் அல்லது சண்டையை பிரதிநிதித்துவம் செய்யும் சமூகங்களை சமமாக கருதுவதாகவும் அல்லது நாடுகளின் பிராந்திய கூட்டணியாக அந்த நாடுகளில் உள்ள எந்த ஒரு நாட்டினதும் சமச்சீரற்ற சுயவிபரக் கலவையை மற்றைய நாடுகள் கூட்டாக சமநிலைப் படுததுவதாகவும் இருக்க வேண்டும்.

அது மிகவும் பிரதிபலிப்பதாகவும், கருத்தியல் அளவில், மற்றும் நடந்து முடிந்தவைகளின் நலன்களை வெளிப்படுத்துவதாகவும் இருக்கும். ஆனால் உண்மையான வரலாற்றை பொறுத்தவரை களத்தில் நடந்தது என்ன?

இந்திய - இலங்கை ஒப்பந்தம் அது கையெழுத்தான உடனேயே அரசியல் மற்றும் இராணுவ முன்னிலைகளிலும் மற்றும் வடக்கு மற்றும் தெற்கு திரையரங்குகளிலும் நெருக்கடியில் மூழ்கியது. சுருக்கமாக சொன்னால் மொத்தமுமே நெருக்கடிதான். அதற்கான வெளிப்படையான காரணங்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் கடுமையான எதிர்ப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் வளர்ந்து வரும் கிளர்ச்சி என்பனவே. இரண்டுமே இடையீடான இலக்குகளாக இருந்தன. தமிழீழ விடுதலப் புலிகளின் எதிர்ப்பு ஒன்றில் ஏற்படாமலோ அல்லது வெகு விரைவிலேயே முடிக்கப் பட்டிருந்தால் அப்போது சிங்களவர்களிடமிருந்து வரக்கூடிய எதிர் தாக்குதல், ஒப்பந்தத்துக்கு ஆதரவான மத்திய வலது மற்றும் இடது சாரிகளால் அடக்கப் பட்டிருக்கும். மாறாக ஜேவிபியின் எழுச்சி 1971ல் நடந்ததை போலவே விரைவாகவே அடக்க இயலுமாக இருந்தது. ஐபிகேஎப் இற்கு அதனது பணியை நிறைவு செய்வதற்கு நீண்ட காலம் எடுக்க அனுமதிக்கப் பட்டிருந்தது, மற்றும் ஒருவேளை மிகவும் முக்கியமாக அதிகாரப் பகிர்வு நடவடிக்கைகள் இந்தியாவும் மற்றும் தமிழ் கட்சிகளும் வேண்டிய வகையில் கொழும்பில் முடிப்பதற்காக அவ்வாறு செய்யப் பட்டிருக்கலாம்.

அரசியல் பரப்புரை

அப்படி நடந்ததினால், எல்.ரீ.ரீ.ஈயின் எதிர்ப்பு மற்றும் தமிழ் நாட்டில் நடந்த அரசியல் பரப்புரை என்பன இந்த நடவடிக்கையில்; தமிழ்நாட்டு காரணியை பெரிய அளவில் கொண்டுவந்தது, தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளடங்கியிருந்ததால் ராஜிவ் காந்தியினாலும் அதைப் புறக்கணிக்க முடியவில்லை. ஆகவே டெல்லி தனது இராணுவ பதிலை ஏதோ வழியில் அளவிட வேண்டியிருந்ததை உணர்ந்தது, அதற்காக அதிகாரப் பகிர்வு அளவை கொழும்பில் இருந்து பிரித்தெடுக்க வேண்டும் என்று சொன்னது. வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு ஏதாவது கிடைப்பதை காணவேண்டியிருந்தது. அதற்கு மேலும் என்ன இறுதியாக எல்.ரீ.ரீ.ஈ யினையும் உள்ளடக்கி அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு உடன்பாட்டிற்காக போராடுவதைப் பார்க்க வேண்டியிருந்தது,

தமிழ் நாட்டு அரசாங்கத்துக்கு நம்பிக்கையாக அது ஏதாவது சொல்ல வேண்டியிருந்தது, அதற்காக எல்.ரீ.ரீ.ஈயுடன் போராடுவது அதை அழிப்பதற்காக அல்ல, ஆனால் அதை பேச்சு வார்த்தை மேசைக்கு இழுத்து வருவதற்காக என்று சொல்லி வைத்தது. இது அவர்களின் நலன்களுக்காக மட்டுமல்ல ஆனால் யாழ்ப்பாணம்,கொழும்பு, மற்றும் மேற்கிலிருந்த செல்வாக்கான தமிழர்களுக்கு வேண்டியும் செய்யப்பட்டது, ஏனென்றால் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிரான மனித உரிமைகள் தொடர்பான கூட்டு இராஜதந்திர பிரச்சாரம் ஆரம்பித்த நாட்களிலிருந்தே இவர்களுக்கு இந்தியர்களுடன் அணுகுமுறைகள் இருந்து வந்துள்ளது. இந்திய செயல்பாட்டிற்கு முகாந்திரம் எதுவுமில்லை. அதன் உண்மையான கொள்கை புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதே.

இந்த கொள்கை புலிகளின் புத்திசாலித்தனமான ஏமாற்று நடவடிக்கைகளினால் மேலும் வளர்க்கப்பட்டது, இதற்காக றோவை இணங்கவைப்பதற்காக கிட்டு (பிரபாகரனின் முன்னாள் துணை தலைவரும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈயின் யாழ்ப்பாண தளபதியுமான) ஈடுபடுத்தப் பட்டார் – அவர் அதை தன்னாலேயே நம்ப முடியாத அளவுக்கு திறமையாக செய்து முடித்தார் அந்த ஏமாற்று நடவடிக்கை குறிப்பிட்ட விரிவான நிபந்தனைகளுடன் நீடித்த பேச்சு வார்த்தைக்கு புலிகளை கொண்டு வருவதைக் கொண்டிருந்தது.

இந்தியர்கள் எல்.ரீ.ரீ.ஈக்கு எதிராக ஒரு மட்டுப்படுத்தப்பட்ட போரையே நடத்தினார்கள் அதேவேளை பிரபாகரனோ அவர்களுக்கு எதிராக ஒரு மொத்தப் போரையே நடத்தினார். உண்மையில் மேலும் அந்த நேரத்தில் இந்தியர்கள் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட போரை நடத்தாமல் ஒரு பலமான மொத்தப் போர் உத்தியை பயன்படுத்தியிருந்தால் போதுமானளவுக்கு விரைவாக ஒரு வெற்றியை பெற்றிருக்கலாம் அல்லது உடன்படிக்கையை தென் பகுதியிலும் சாந்தப் படுத்தும் வகையில் வெற்றியை நோக்கிய போதுமான முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். பிரேமதாஸ மற்றும் சந்திரிகா ஆகியோர் இந்தியா செய்த அதே தவறையே செய்தார்கள். ரணில் வெறுமனே புலிகளைச் சமாதானப் படுத்தினார். மகிந்த ராஜபக்ஸவின் தெளிவும் மற்றும் அரசியல் விருப்பமும்தான் ஒரு மொத்த போர் உத்தியை தெரிவு செய்து போரில் வெற்றியை இலக்கு வைத்து முன்னேறி பிரபாகரனை அழித்தது.

ஒப்பந்தத்தை உட்கொள்ளுதல்

1987ல் சிங்களவர்களிடம் அந்த ஒப்பந்தத்தை மட்டுமன்றி அதன் வரலாற்று எதிரியான பெரியளவு இராணுவ பிரசன்னத்தையும் உட்கொள்ளும்படி கேட்கப்பட்டது, ஆனால் அதை ஈடு செய்வதற்கு ஏற்ற வர்த்தகப் பரிமாற்றத்திற்கு ஏற்ற ஒரு தெளிவான சமிக்ஞை இன்றி உட்கொள்ளும்படி கேட்கப்பட்டது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் புலிகள் அழிக்கப்படுவதை அது பார்க்க விரும்பவில்லை.

ஐபிகேஎப் தங்களது தங்கியிருப்பு நிச்சயமாக குறுகிய ஒன்றாக இருப்பதற்கான போதிய முன்னேற்றம் எதையும் கொடுக்கவில்லை என்றும் இதற்கு அர்த்தம் கொள்ளலாம். கிழக்கு மாகாணத்தில் ஐபிகேஎப் இன் ஆரம்ப நடவடிக்கை, திருகோணமலையில் ஒரு ஆர்ப்பாட்ட பின்னணியில் வைத்து ஒரு புத்த பிக்குவை சுட்டது உட்பட, மற்றும் புலேந்திரனின் தற்கொலைக்குப் பின்னர் மட்டக்களப்பில் புலிகளினால் 200 சிங்களவர்கள் சாகும் வரை எரிக்கப்பட்ட விடயத்திலும் பக்கச் சார்பாக நடந்து கொண்டது சிங்களப் பகுதிகளில் ஐபிகேஎப் க்கு எதிராக ஆழமான பகைமையை தூண்டியது. அதனால் ஜே.ஆர் ஜெயவர்தனா தமிழர்களுக்கு சலுகைகள் வழங்கும்படி இந்தியர்களின் அழுத்தங்களுக்கு உள்ளானார் – அல்லது நீங்கள் தயாரானால் எஞ்சிய விஷயங்களில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் – துல்லியமாக அந்த நேரத்தில் ஆகக்குறைந்தது அப்படிச் செய்யவும் அவரால் முடியவில்லை.

இதேபோல மற்றும் ஒரே சமயத்தில் ஜே.ஆர் இந்தியர்களிடம் வெளிப்படையாக முழுப் பலத்தையும் பிரயோகித்து தாக்குதல் நடத்தி புலிகளை அழிக்கும்படி கேட்டுக் கொண்டார், அந்த நேரத்தில் தமிழர்கள் மத்தியில் அப்படிச் செய்வதை இந்தியர்களால் பார்க்க முடியாதிருந்தது, – மற்றும் குறிப்பாக அதிகாரப் பரவலாக்கம் பற்றிய விடயத்தில் எதுவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், ஜெயவர்த்தனாவால் சாத்தியமானதை செய்ய முடியவில்லை. அது ‘காட்ச் 22’ வைப் போல தீர்வு காணமுடியாத ஒரு ஒற்றறை பிரச்சினையாக இருக்கவில்லை ஆனால் ஒன்றை ஒன்று பின்னிய ஒரு முழுத் தொகுதியாக இருந்தது.

இந்தியர்கள் ஸ்ரீலங்கா இராணுவத்துடனான தங்கள் உறவை ஒட்டு மொத்தமாக தவறாக வளர்த்திருந்தார்கள் இதனால் அவர்களுக்கு மிகவும் அவசியமான புலிகளின் ஆயுதங்களின் அளவு மற்றும் கலவைகள் பற்றிய விடயங்கள் தொடர்பான உளவுத் தகவல்களை அவர்களால் பெற முடியவில்லை.

இந்தியர்கள் நெருங்கிய உதவிக்கான பங்களிப்பில் தந்திரோபயமான வான்படைகளை மிகவும் அரிதாகவே பயன்படுத்தினார்கள். துருப்புக்களை ஏற்றி இறக்கும் நோக்கங்களுக்காக மட்டுமே அவர்கள் உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்தினார்கள். அவர்களின் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட எம்ஐ – 24 உலங்கு வானூர்திகள் வெகு அரிதாகவே பயன்படுத்தப் பட்டன. ஸ்ரீலங்கா நாடகத்துக்காக அப்படியான வெகு சிலவே கொள்வனவு செய்யப்பட்டிருந்தன, சோவியத்துடன் அவர்களுக்கு இருந்த தொடர்பை பயன்படுத்தி வெகு சுலபமாக அப்படியானவற்றை அவர்களால் பெற்றிருக்க முடியும்.

அங்கீகரிக்க தவறியது

இந்தியா அங்கீகரிக்கத் தவறியது, 1985ல் நடந்த திம்பு பேச்சு வார்த்தையில் ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பு ஒரு கற்சுவரை எழுப்பியிருந்த அதேவேளை 1986ம் அதைத் தொடர்ந்த வருடங்களிலும் கணிசமானளவு தளர்வு ஏற்படுத்தப் பட்டிருந்தது. இது ஒரு பகுதி நிலமையை பற்றி கற்றுக் கொண்டதாலும், ஒருபகுதி இந்தியாவின் உள்ளீடு காரணமாகவும் மற்றும் ஒரு பகுதி விஜய குமாரதுங்க தலைமையிலான இலங்கை இடது சாரிகள் 86ன் நடுப்பகுதியில் நடத்திய அரசியல் கட்சி மாநாட்டின் இடையீடு காரணமாகவும் ஏற்பட்டது. உண்மையில் இந்த அரசியல் கட்சி மாநாட்டின் பின்னர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் நிச்சயமான திருப்பமும் மற்றும் இந்த விடயத்தில் ஒரு தீர்வை காண்பதற்கான உண்மையான சாத்தியங்களும் உண்டாயின.

இந்த இடைவெளி மற்றும் அதன் சாத்தியங்கள் இரண்டு காரணிகளால் முடிவுக்கு வந்தன:

(1) நேரம் கடந்த தீர்க்கமான இராணுவ நடவடிக்கைகள் – நிராயுதபாணிகளான சிங்கள குடிமக்களை இலக்கு வைத்து எல்.ரீ.ரீ.ஈ மேற்கொண்ட தாக்குதல்கள், புரிந்து கொள்ளத் தக்க வகையில் அது ஒரு ஸ்ரீலங்கா இராணுவ பதிலடியை தோற்றுவித்தது.

(2) புது தில்லி வெளிப்படுத்திய அழுத்தங்களின் அதிகரிப்பு.

86 – 87ல் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு நியாயமான அளவு அதிகரித்திருந்து, அதில் மைல் கல்லாக அமைந்தவை பங்களுருவில் நவம்பரில் நடைபெற்ற சார்க் மாநாடு, 86,டிசம்பர் 19ல் சிதம்பரம் - நட்வர்சிங் தூதுக்குழு மற்றும் 87 பெப்ரவரி 17 ம் திகதிய நிலைப்பாடு என்பன. ஆனால் டெல்லியின் அதிகரித்த கோரிக்கைகள் மற்றும் அதிகரித்த அழுத்தங்களினால் முடிவு இயக்கப்பட்டபோது, ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மறுப்பின் இடைவெளி அதை திருப்பியடித்தது இது இந்திய – இலங்கை இந்திய ஒப்பந்தமாக மாறி கையெழுத்து இடும் வரை நடந்து கொண்டிருந்தது.

என்ன வரப்போகிறது என்பதற்கு இந்தியாவிற்கு போதுமான முன்னெச்சரிக்கை கிடைத்திருந்தது. எல்.ரீ.ரீ.ஈ யின் நடத்தையை முன்கூட்டியே எதிர்பார்த்து அழுத்தம் பிரயோகித்து அதை நடுநிலையாக்க தயாராக இருந்திருக்க வேண்டும். ஏற்கனவே 86ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் எல்.ரீ.ரீ.ஈ, தமிழீழ விடுதலை இயக்கத்தை(ரெலோ) வதம் செய்தது, அதற்காக ரெலோ இந்தியாவின் ஒரு முகவர் எனும் நாடக மேடை அரசியல் பிரச்சாரத்தை அது மேற்கொண்டது. இந்த பிரச்சாரத்தின் மதிப்பீடு ஒன்று மட்டுமே போதும் புது தில்லிக்கு புலிகளின் உண்மையான அணுகுமுறை என்ன மற்றும் அது எப்படி நடந்து கொள்கிறது என்பதை வெளிப்படுத்த.

டெல்லி அதன் பிரதான சொத்தாக விளங்கிய ரெலோவையும் மற்றும் அதன் தலைவர் சபாரத்தினத்தையும் அழிக்க அனுமதித்தது மட்டுமன்றி ஒப்புதல் இன்றியே முன் செல்லவும் அனுமதித்தது - இது அவரைக் கொல்ல மாட்டோம் என்று எல்.ரீ.ரீ.ஈ தில்லிக்கு வழங்கியிருந்த வெளிப்படையான வாக்குறுதிக்கு மாறாக நடந்ததுடன் எல்.ரீ.ரீ.ஈயின் இந்த திட்டம் தொடர்பான சாட்சிகளையும் அது அலட்சியப் படுத்தியது. பிரபாகரனின் ஆக்கிரமிப்பு மற்றும் ஒப்பந்தத்தின் மீதான பற்றற்ற தன்மையை பற்றி அறிந்து கொள்ள அல்லது கணித்தறிய வழியேதும் இல்லாததால் புது தில்லி அப்படி நடந்து கொண்டது எனக்கூறுவது வெறும் கண்துடைப்பு. ஒரு வருடம் முன்பே இது பற்றிய சரியான கணிப்பு கிடைத்திருந்தது. மோதல் கணிப்பிடப்பட்டது அதனால் வெற்றி பெற்றிருக்க முடியும். பேரிடர் பற்றிய கணிப்பும் தெரிந்திருந்தது அதனால் அதையும் தவிர்த்திருக்கலாம்.

(இந்த எழுத்தாளர் வடக்கு – கிழக்கு மாகாணசபையில் 1988 – 1989 காலத்தில் அமைச்சராக இருந்தவர்)

மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல