Ellanora Baidoo (kiri) menceraikan sang suami, Victor Sena Blood-Dzraku lewat Facebook. (Istimewa)
பேஸ்புக் வழியாக ஒருவரை எளிதில் அணுக முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற சம்பவமொன்று.அமெரிக்காவின் நியூயோர்க்கைச் சார்ந்த எலனோரா பைடோ கடந்த 2009-ஆம் ஆண்டு விக்டர் செனா என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆனால், இருவரும் சேர்ந்து வாழவில்லை அதோடு 2011-ஆம் ஆண்டு முதல் விக்டர் காணாமல் போயுள்ளார். தன்னுடைய மனைவியிடம் கூட போன் மற்றும் பேஸ்புக் வாயிலாக மட்டுமே தொடர்பு கொண்டுள்ளார்.
சேர்ந்து வாழாத விக்டரிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று எலனோரா விவாகரத்து கேட்டு மனு ஒன்றை அளித்துள்ளார், அதனை விக்டரிடம் தெரிவிக்க அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போகவே, அவருக்கு பேஸ்புக் வாயிலாகவே விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சட்ட ரீதியாக பேஸ்புக் மூலம் விவாகரத்து நோட்டீஸ் அனுப்புவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து எலனோராவின் வழக்கறிஞர் ஆண்ட்ரூ ஸ்பின்னல் கூறும் போது, ''இது ஒரு புதுச்சட்டம் என்றே நினைக்கிறேன் வருங்காலத்தில் இது அத்தியாவசியமாய் மாறிவிடும். எலனோராவுக்கு 2009-ஆம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. ஆனால், அவர்கள் முறையாக சேர்ந்து வாழவில்லை. 2011-ஆம் ஆண்டு முதல் காணாமல் போயுள்ளார். தபால் அலுவலகத்தில் கூட கடிதங்கள் அனுப்பிய தடயமில்லை. மொபைல் போன் மாதச்சந்தாதாரர் இல்லை என்பதால் அதன் மூலமாகவும் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
மோட்டார் வாகன திணைக்களத்தில் கூட விக்டரின் இருப்பிடத் தகவல்கள் கிடைக்கவில்லை. இப்படி அனைத்து விதமாக முயற்சிகளையும் செய்து பார்த்தோம். எல்லாவற்றையும் விட தனியார் துப்பறியும் அதிகாரி மூலமாகவும் சோதனை செய்தோம். விக்டரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதனால், வேறு வழியின்றி பேஸ்புக் மூலமாகவே அவருக்கு விவாகரத்து குறித்த தகவல் சட்டப்படி தெரிவிக்கப்பட்டது'' என்றார் .
''எத்தனையோ வழிகளில் விக்டரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. ஆதலால், வேறு வழியின்றி பேஸ்புக் ப்ரைவேட் மெஸேஜ் வழியாக விவாகரத்து குறித்து தகவல் அனுப்பபட்டது. இதனை மற்றவர்கள் விரும்பினாலும், இல்லை யென்றாலும் வருங்காலத்தில் பேஸ்புக் வழியாக விவாகரத்து பெறுவது எளிதாகிவிடும்'' என்கிறார் எலனோரா.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக