ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

ஒற்­றைக்­காலில் நிற்க முடி­யுமா..?

பிடி­வா­தக்­கா­ரர்­களை ஒற்­றைக்­காலில் நின்று சாதிப்­ப­வர்கள் என்று சொல்­வ­துண்டு. ‘உங்­க­ளாலும் ஒற்­றைக்­காலில் நிற்க முடிந்தால் நீங்கள் பிடி­வா­தக்­கா­ரரோ இல்­லையோ, ஆரோக்­கி­ய­மா­னவர் என்றே அர்த்தம்’ என்­கி­றது ஜப்­பானில் மூளைத்­தாக்கு நோய் பற்றி வெளி­யி­டப்­பட்ட ஆய்­விதழ் தகவல் ஒன்று.



ஒரே காலில் தாக்குப் பிடித்து 20 நொடிகள் வரை நிற்க முடிந்­த­வர்­க­ளுக்கு எந்தப் பிரச்சினை யும் இல்லை. அவ்­வாறு நிற்க முடி­யாமல் திண­று­கி­றார்கள் என்றால் அவர்­க­ளுக்கு மூளைத்­தாக்கு நோய் அல்­லது மறதி நோய் வரு­வ­தற்கு வாய்ப்பு இருக்­கி­றதாம்.

ஒரு காலில் சமா­ளித்து நிற்க முடி­யா­த­வர்­க­ளுக்கு மூளையில் சிறிய அள­வி­லான ரத்­தக்­க­சிவு இருக்­கலாம் என்­கி­றது இந்த ஆய்வு.

இதனால் அடுத்­த­கட்­ட­மான மூளைத்­தாக்கு நோயும் மறதி நோயும் ஏற்­பட வாய்ப்­புண்டாம். 67 வய­து­டைய 1,387 ஆண், பெண்­களை ஒற்­றைக்­காலில் நிற்க வைத்து ஆய்­வுக்கு உள்­ளாக்கி, எம்­ஆர்ஐ ஸ்கேன் எடுத்து அவர்­களின் மூளையின் செயல்­பா­டு­க­ளையும் ஆராய்ந்­தனர்.

ஒற்­றைக்­காலில் நிற்க இய­லாத 30 சத­வி­கிதம் பேருக்கு மூளையில் சிறிய அள­வி­லான காயங்­களோ, சில பகு­தி­களில் போது­மான ரத்த ஓட்டம் இல்­லா­மலோ இருந்­தது. 16 சத­விகிதம் பேருக்கு மூளையில் இருக்கும் ஒரு காயமே பிரச்சி­னை­களை கொண்டு வரும்­படி இருந்­தது. 30 சத­வி­கி­தத்­தி­ன­ருக்கு 2 அல்­லது அதற்கு மேற்­பட்ட சிறிய கிரத்­தக்­க­சி­வுகள் மூளையில் இருந்­தன. வய­தா­ன­வர்­க­ளுக்கு மூளைத்­தாக்கு நோய் வரும் அறி­கு­றியை கண்­ட­றி­வது கடினம்.

இவர்­களை ஒரு காலில் சில நொடிகள் நிற்க வைத்துப் பார்த்து, எளிதில் அறி­கு­றியை அறிந்து விட முடியும். மறதி நோயையும் அறி­யலாம்.ஒரு காலில் நிற்கும் போது சம­நிலை தவ­றி­னாலோ, அடுத்த காலின் பக்கம் அதிகமாக சாய்ந்தாலோ மூளை சம்பந்தமான நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றும் எச்சரிக்கிறது இந்த ஆய்வு முடிவு!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல