ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

நரை முடிக்கு....

தற்போதைய தலை முறையினருக்கு வெள்ளை முடி இளம் வயதிலேயே வந்து விடுகிறது. இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்க வழக்கங்கள், மன அழுத்தம், பரம் பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடிக்கு போதிய பராமரிப்பு வழங் காததும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் பலரும் வெள்ளை முடியை மறைக்க பல்வேறு ஹெயர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர அப்படியே இருக்கும்.



இளம் வயதிலேயே நரை முடி வருவதற்கான காரணங்கள்

அதுமட்டுமின்றி, வெள்ளை முடியை மறைக்க கண்ட கண்ட பொருட்களை வாங்கி முடிக்கு தடவுவதால், பல்வேறு அலர்ஜிகளும் ஏற்படுகின்றன. ஆகவே இவற்றையெல்லாம் தவிர்க்க, இயற்கை முறையில் வெள்ளை முடியை எப்படி கருமையாக்குவது என்று யோசியுங்கள். இங்கு நரை முடியை இயற்கை முறையில் எப்படி கருமையாக்குவது என்று ஒருசில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும்.

ஹென்னா :ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.

நெல்லிக்காய்: நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, தலையில் படும்படி நன்கு மசாஜ் செய்யவும்.

கறிவேப்பிலை: கறிவேப்பிலை, மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அதனை தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற ைவத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல