ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

எம்.எஸ். டாஸ் (MS-DOS) என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரித்ததா? ஐ.பி.எம். நிறுவனம் தயாரித்ததா?

ஏன் அந்த சிஸ்டம் ஐ.பி.எம். கம்ப்யூட்டர்களில் இயங்கும் டாஸ் என அழைக்கப்படுகிறது?

கம்ப்யூட்டர் தயாரித்த ஐ.பி.எம். நிறுவனம், “செஸ்” என்ற குறியீட்டுப் பெயரில், ஒரு ப்ராஜக்ட் ஒன்றைத் தயாரித்து தருமாறு, அப்போது தொடங்கப்பட்ட மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டது.



1981 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட், ஐ.பி.எம். கம்ப்யூட்டர்களில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டமான எம்.எஸ். டாஸ் (Microsoft Disk Operating System (MS-DOS)) என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வடிவமைத்துக் கொடுத்தது.

கம்ப்யூட்டர்கள் இயங்க இது ஓர் அடிப்படை இயக்கத்தினைத் தந்தது.

ஹார்ட்வேர் மற்றும் புரோகிராம் என்ற இரு பிரிவுகளுக்கிடையே இருந்த இடைவெளியை இது இணைத்தது.

இந்த சிஸ்டம் சாப்ட்வேர் மூலமே, மைக்ரோசாப்ட் பெர்சனல் கம்ப்யூட்டிங் என்ற பிரிவில் நுழைந்து கடந்த 40 ஆண்டுகளாகத் தனிக் காட்டு ராஜாவாக உலா வருகிறது.

1983 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 1.0 என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, டாஸ் சிஸ்டத்தின் மேம்படுத்தப்பட்ட இயக்கமாகத் தந்தது.

முதல் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 1985ல் விற்பனைக்கு வந்தது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல