வெள்ளி, 8 அக்டோபர், 2010

வீட்டு வாடகை தராததால் மின் கம்பத்தில் பெண்ணை கட்டி வைத்து சித்ரவதை

செஞ்சி அருகே சண்டிசாட்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி முனியம்மாள் (வயது 35). இவர் செஞ்சி அருகே திருவண்ணாமலை சாலையில் உள்ள பி.ஏரிக்கரை பகுதியில் கருணாநிதி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

ஆனால் இவர் கடந்த 2 வருடமாக வீட்டுக்கு வாடகை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. வாடகை கேட்கும்போது இன்று, நாளை என்று ஏமாற்றி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் முனியம்மாள் இன்று அதிகாலை யாருக்கும் தெரியாமல் வீட்டை காலி செய்ய முயன்றார். இதனை அறிந்த வீட்டு உரிமையாளர் கருணாநிதி மற்றும் அவரது மனைவி ராணி ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்கள் முனியம்மாளிடம் வாடகையை கொடுத்து விட்டு வீட்டை காலி செய்யுமாறு கூறினர். ஆனால் அதற்கு முனியம்மாள் உடன்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கருணாநிதி மற்றும் அவரது மனைவி ராணி ஆகியோர் முனியம்மாளை அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். வீட்டு வாடகை கொடுத்தால்தான் விடுவிப்போம் என அவர் கள் கூறியதாக தெரிகிறது.

இதுபற்றி அப்பகுதி மக்கள் செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மயங்கிய நிலையில் கிடந்த முனியம்மாளை மீட்டு செஞ்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல