வெள்ளி, 8 அக்டோபர், 2010

பாகிஸ்தான் பிரதமர் மகனிடம் போலி பட்டச் சான்றிதழ்

பாகிஸ்தானில் உள்ள மாகாண எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களில் பலர் போலியான பட்டப்படிப்புச் சான்றிதழ்களை வைத்திருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இது பற்றி தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் அந்த நாட்டு தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனால், இந்த பிரச்சினை குறித்து விசாரிக்க அரசு சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இருப்பதால் தீர்ப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் ïசுப் ராஜா கிலானியின் மகன் அப்துல் காதிர் கிலானியும் போலி பட்டச் சான்றிதழ் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. பஞ்சாப் மாகாண சட்டசபை எம்.எல்.ஏ.வாக அப்துல் காதில் இருந்து வருகிறார். பஞ்சாப் பல்கலைக்கழகத்திடம் இருந்து பி.ஏ. பட்டம் பெற்றதாக அவர் கூறி இருக்கிறார். ஆனால், அது போலியானது என்றும் தேர்வு எழுதுவதற்கான அனுமதி கூட அவருக்கு அளிக்கப்படவில்லை என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், போலி சான்றிதழ் விவகாரம் குறித்து விசாரிக்கும் கமிட்டி சார்பாக அப்துல் காதிருக்கு மூன்று முறை நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. எனினும், ஒருமுறை கூட கமிட்டி முன்பு அவர் ஆஜராகவில்லை.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல