எனினும் ஏற்கனவே பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை அரசி யலமைப்பு நீதிமன்றம் சிறு திருத்தத்துடன் அங்கீகரித்துள்ளது.
வழிபாட்டிடங்கள் போன்ற பொது இடங்களில் முகத்தை மூடி ஆடை அணிய தடைவிதிப்பது சமய சுதந்திரத்தை மீறும் செயல் என தெரிவித்து வழிபாட்டிடங்களுக்கு மட்டும் இந்த சட்டத்தில் விதிவிலக்களிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் எதிர்வரும் இளவேனில் காலத்தில் அமுலுக்கு வரும் போது, 150 யூரோ தண்டப்பண விதிப்பையும் போதனையொன்றினையும் எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
அதே சமயம் முகத்தை மூடி ஆடை அணியப் பெண்களைப் பணிப்பவர்கள் 30,000 யூரோ தண்டப்பணத்தையும் ஒரு வருட சிறைத் தண்டனையையும் எதிர்கொள்ள நேடும்.
மேலும் இந்த சட்டத்தின் பிரகாரம் அச்சட்டமும் அமுலாக்கப்படும் முதல் 6 மாத காலப்பகுதியில் கைது செய்யப்படுபவர்களுக்கு அது தொடர்பான போதனையும் அவர்கள் அப்போதனைக்கு பின்பும் தமது வழக்கத்தை தொடரும் பட்சத்தில் அவர்கள் தண்டப் பண விதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸில் முகத்தை மூடி ஆடை அணியும் 2000 பெண்கள் மட்டுமே இருப்பதாக மதிப்பீடுகள் கூறுகின்றன.
இதையொத்த சட்டத்தை அல்படுத்தும் முகமாக ஸ்பெயினும் பெல்ஜியமும் ஆலோசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக