வெள்ளி, 8 அக்டோபர், 2010

மகளையும், மகளின் காதலரையும் கொல்ல முற்பட்ட தந்தை!

இலங்கையச் சேர்ந்தவரும் தற்போது ஒன்ராரியோ மாநிலத்தில் வசித்து வருபவருமான செல்வநாயகம் செல்லத்துரை (வயது 46) என்பவர் ஜாதி குறைந்த இளைஞனை காதலித்த தனது மகளையும் அவருடைய காதலனையும் வானில் இழுத்துச் சென்று தாக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் இருந்து குடிப்பெயர்ந்த குறித்த நபர், கடந்த 2007ம் ஆண்டு இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த கொலை முயற்சி குற்றச்சாட்டின் பேரில், அவருக்கு அடுத்த மாதம் தண்டனை வழங்கப்படவுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, இவரது இளைய மகள் அனிதா (அப்போது வயது 16) பிரசன்னா ஆனந்தராஜா (அப்போது வயது 18) என்பவரை காதலித்து இருக்கின்றார். இளைய மகளின் காதலன் குறைந்த ஜாதியை சேர்ந்தவர் என்பதால் தகப்பன் செல்வநாயகம் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை.

தனது காதலுக்கு தந்தை விருப்பம் தெரிவிக்காமையினால் அவரது மகள் அனிதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து அனித்தாவின் அக்காவான ஜெனிதாவும், அவருடைய கணவன் சுந்தரலிங்கமும் வீட்டைவிட்டு வெளியேறியவர்களை தேடிச் சென்றுள்ளனர்.

இதன்போது அவர்கள் கனேடிய பாடசாலை ஒன்றிற்கு அருகில் அவர்கள் கட்டுபிடிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக குறித்த இடத்திற்குச் சென்ற செல்வநாயகம் செல்லத்துரை தனது இளைய மகளையும் அவருடைய காதலனையும் வானில் இழுத்துச் சென்று மரத்தில் மோதியுள்ளார். அவரது மூத்த மகளின் கணவரும் அந்த வான் மூலம் தாக்குதலுக்கு உள்ளானார். சம்பவத்தில் பிரசன்னாவின் கைகள் உடைந்த நிலையில், அருகில் இருந்து பாடசாலை ஒன்றினுள் சென்று தப்பிக்க முயற்சித்துள்ளார். இதன் போது பலர் கூடி இருந்த அந்த பிரதேசத்தில், குறித்த இளைஞனை கொன்றுவிடுவதாக சந்தேகநபர் மிரட்டியுமுள்ளார்.

இதனை அடுத்து சம்பவத்தை அறிந்து அங்கு வந்த காவற்துறையினர் செல்வநாயகம் செல்லத்துரையை கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கில் மூன்று வருடங்களுக்கு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட அவரது வழக்கு மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி விசாரணைக்கு வருகிறது.

இதன் போது அவருக்கு நீதிமன்றம் தமது இறுதித் தீர்ப்பை வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல