வெள்ளி, 8 அக்டோபர், 2010

புகைத்தலுக்கு அடிமையான மனிதக் குரங்கு மரணம்

தென் ஆபிரிக்க மன்கோகாங் மிருகக்காட்சிசாலையை சேர்ந்த புகைப்பிடித்தலுக்கு அடிமையான 52 வயதான மனிதக் குரங்கு மரணமடைந்துள்ளது.

தனது புகைப்பிடிக்கும் வழக்கத்தின் மூலம் சார்ளி என்ற மேற்படி குரங்கு உலகளாவிய ரீதியில் பிரபலமடைந்திருந்தது.

சார்ளியின் புகை பிடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க மிருகக்காட்சி நிர்வாகம் ஊழியர்களும் விரும்பாத போதும், மிருகக்காட்சிசாலைக்கு விஜயம் செய்யும் பார்வையார்கள் சார்ளியின் கூண்டுக்குள் சிகரட்டுகளை பற்ற வைத்து வீசுவதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் இந்த குரங்கு காலப்போக்கில் புகைப்பிடித்தலுக்கு அடிமையானதாகவும் மிருகக்காட்சிசாலையின் உத்தியோகத்தர் குவன்டில் கொடாமா தெரிவித்தார்.

இந்நிலையில் சார்ளியின் மரணத்துக்கும் அதனது புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை கண்டறிய அதன் சடலம் பிரேத பசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல