வெள்ளி, 8 அக்டோபர், 2010

ஆணுறைகளால் பொதுநலவாய போட்டிகளுக்கு வந்த ஆபத்து

டெல்லியில் தற்போது பொதுநலவாய போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.இதில் பங்குபெற்றும் போட்டியாளர்கள் தங்குவதற்கென தனிக்கிராமமும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் அதிகப்படியான ஆணுறைகள் கழிவு நீர்த்தொகுதியில் அடைப்பட்டுள்ளமையால் அக் கிராமத்தின் கழிவு நீர்த்தொகுதி அடைப்பட்டுள்ளது.

இதனை சரிசெய்வதற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் பாடுபட்டுவருவதாக ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பொதுநலவாய போட்டிகள் சம்மேளனத்தின் தலைவர் மைக் பெனல், இது ஓர் ஆரோக்கியமான விடயமெனவும் வீரர்கள் பொறுப்புணர்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இக் கிராமத்தில் போட்டி ஏற்பாட்டாளர்கள் 8,000 இலவச ஆணுறைகளை விநியோகித்துள்ளதாகவும், அதற்கான கேள்வி இன்னும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 4ஆயிரம் ஆணுறைகள் தீர்ந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. போட்டிகளின் போது இலவச ஆணுறைகள் வழங்கும் திட்டமானது 1992 ஆம் ஆண்டு பார்சிலோனாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது தொடங்கியது.

இன்றுவரை இது பாரம்பரியமாக நடைபெற்று வருகின்றது 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்போட்டியின் போது முதலில் 70ஆயிரம் உறைகள் வழங்கப்பட்டன. பிறகு அதிகரித்த தேவையின் காரணமாக 20ஆயிரம் மேலதிகமாக வழங்கப்பட்டன.

2004 எதேன்ஸில் இடம்பெற்ற போட்டியின் போது 1,30,000 உறைகள் வழங்கப்பட்டன. 2008 பீஜிங் ஒலிம்பிக் மற்றும் வன்கூவர் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போதும் தலா 1,00,000 உறைகள் விநியோகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ,

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல