அதற்குப் பதிலளித்துள்ள அவர்,
வைகோ தனிக் கொள்கை வைத்துள்ளார். அதே போல நாங்களும் தனிக் கொள்கை வைத்துள்ளோம். நாங்கள் கூட்டணியாக இருப்பதால் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இல்லை. நாங்கள் புலிகளை எதிர்ப்பது நீடிக்கிறது.
மத்திய அரசு புலிகளை தடை செய்வதற்கு நாங்களும் ஒரு கருவியாக இருந்தோம். அதே நேரத்தில் இலங்கை தமிழர்களுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்.
அவர்கள் இலங்கை அரசால் மிகவும் மோசமாக நடத்தப்பட்டு வருகின்றனர். தடுப்பு வேலிக்குள் வைக்கப்பட்ட மக்களை சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும். என்று அதிமுக பொதுச் செயலாளர் செல்வி.ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக