செவ்வாய், 16 நவம்பர், 2010

நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தலை நடத்த இந்தியா அனுமதிக்காது

இந்திய மண்ணில் நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தலை நடத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என்று கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கு இந்தியாவிலும் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் அறிவித்திருந்தார்.

இது பற்றிக் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக வட்டாரங்கள் தகவல் வெளியிடுகையில்;

�இந்தியா மண்ணில் நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தலை நடத்த முற்பட்டால் அதற்கு எதிராக இந்திய அரசு சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளும்� என்று தெரிவித்துள்ளன.

நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் இந்தியாவிலும் நடத்தப்படும் -உருத்திரகுமாரன்!

நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலை இந்தியாவிலும் நடத்துவதற்கான பணிகள் முன்னெடுக்க இருப்பதாக நாடுகடந்த புலிகளின் தமிழீழ அரசு பிரதமர் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அஸ்திரேலிய இன்பத்தமிழ் வானொலிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்

இந்தியாவுக்கான நாடுகடந்த புலிகளின் தமிழீழ அரசின் பிரதிநிதிகளுக்கான தேர்தலை இந்தியாவிலும் நடத்தக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதால் அதனை நடத்ததுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும்.

தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெளியை நிரப்பபும் முயற்சியே நாடுகடந்த புலிகளின் தமிழீழ அரசு எனவும் அதன் பிரதிநிதிகள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகள் சனநாயகத்தின் பண்பியல்புகளாகவே பார்க்கப்பட வேண்டும்.

எனினும் எமது புலிகளின் பிரதிநிதிகள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகள் கொள்கை அடிப்படையிலான முரண்பாடுகளாக இருப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

தற்போது புலி தமிழர்களை தாயகத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனோ அல்லது வேறு அமைப்புகளுடனோ வெளிப்படையான உறவுநிலையை பேண முடியாது.

எனினும் தாயகத்தில் உள்ளவர்களினதும் புலத்தில் உள்ளவர்களினதும் (புலிகளின்) இலக்கு ஒன்றாக இருக்கும்போது தனித்தனியாகவே அந்த இலக்கை நோக்கி நகரமுடியும், என்று தெரிவித்துள்ளார்.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல