செவ்வாய், 16 நவம்பர், 2010

தமிழ் அரசியல் கைதிகள் இருவர் உண்ணாவிரதம்

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இருவர் தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதி முதல் இவர்கள் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த திமெத்தேயு சசிகுமார் (வயது29) என்பவரும் மட்டக்களப்பைச் சேர்ந்த சிவபாதம் பிரதீபன் (வயது 26) என்பவருமே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களாவர். தொடர்ந்து ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை பிணையிலாவது விடுவிக்க வேண்டும் எனக் கோரியே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல