செவ்வாய், 16 நவம்பர், 2010

பேச்சுவார்த்தைகளைப் புலிகள் சரியாகப் பயன் படுத்தியிருந்தால் அனைத்து அனர்த்தங் களையும் தவிர்க்க முடிந்திருக்கும்

பேச்சுவார்த்தைகளைப் புலிகள் சரியாகப் பயன் படுத்தியிருந்தால் அனைத்து அனர்த்தங் களையும் தவிர்க்க முடிந்திருக்கும் என்று தயா மாஸ்டர் என்ற வேலாயுதம் தயாநிதி கூறு கின்றார்.

நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் ஊர்காவற்துறையில் சாட்சியம் அளித்த போதே அவர் இக் கருத்தைத் தெரிவித்தார். தயா மாஸ்டர் இறுதிக் கட்டம் வரை புலிகளின் ஊடகப் பேச்சாள ராகப் பணியாற்றியவர்.

உள்ளிருந்து பெற்ற அனுப வத்தின் அடிப்படையில் அவர் தெரிவித்திருக்கும் இக் கருத்து மேலோட்டமான கவனத்துக்கு உரிய தல்ல. தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பான அணுகு முறையைத் தீர்மானிப்பதில் இக் கருத்து முக்கிய கவனத்துக்குரியது.

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை முறிவடைந்ததும் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற விரும்பிய வர்களில் தானும் ஒருவர் என்று தயா மாஸ்டர் கூறுவதிலுள்ள நம்பகத்தன்மை பற்றிய கேள்வியில் அர்த்தமில்லை. புலிகள் இயக்கத்தில் அகப்பட்டுக் கொண்டவர்கள் அதிலிருந்து வெளியேறுவதென்பது நடக்க முடியாத காரியம்.

புலிகள் பேச்சுவார்த்தையைச் சரியாகப் பயன்படுத்தாத தால் அனர்த்தங்கள் ஏற்பட்டன என்ற கருத்தைச் சற்று ஆழமாகச் சென்று பார்க்க வேண்டும். புலிகள் பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்தாததற்கான காரணம் அவர்கள் பற்றி நின்ற பிழையான கொள்கை.

எவ்விதத்திலும் நடை முறைச் சாத்தியமற்ற தனிநாட்டுக் கொள்கையை அவர்கள் பற்றி நின்றார்கள். தனிநாடு அமைக்க முடியும் என்ற கற்பனையில் வாழ்ந்ததாலேயே பேச்சுவார்த்தையை முறித்தார்கள்.

இவ்விடயத்தில் புலிகளை மாத்திரம் குறைசொல்வதில் அர்த்தமில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூடத் தனிநாட்டு மாயைக்குள் சிக்கியிருந்தவை என்பதால், தமிழ் மக்க ளுக்கு ஏற்பட்ட அனர்த்தங்களுக்கு அக்கட்சிகளும் பொறுப்பாளிகளே.

தமிழர் விடுதலைக் கூட்டணியும் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தவறான பாதையில் தமிழ் மக்களை வழிநடத்தியதாலேயே புலிகளின் செயற் பாடுகள் சாத்தியமாகின. இத் தலைவர்கள் சரியான தீர்வுப் பாதையில் தமிழ் மக்களை இட்டுச் சென்றி ருந்தால் புலிகளின் பலம் பெரிதாக வளர்ந்திருக்காது.

இத் தலைவர்கள் எப்போதும் மற்றவர்களில் பிழை காண்பதை விட்டு, கடந்த காலத் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு சரியான தீர்வுப் பாதையில் தமிழ் மக்களை வழிநடத்துவதற்கு முன்வர வேண்டும். தலைவர்கள் மாறாவிட்டால் மக்கள் தலைமையை மாற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது.

இனப் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கையில் தீர்வு காண வேண்டும் என்பதே யதார்த்தம். புலிகளாக இருந்தா லென்ன ஜனநாயக ரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களாக இருந்தாலென்ன இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் தனிநாட்டுக் கனவில் மிதந்ததாலேயே இவ்வளவு அனர்த்தமும் நேர்ந்தது.

ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு காணும் நடை முறை படிப்படியான வளர்ச்சிக் கட்டங்களுக்கூடாக முன்னெடுக்கப்பட வேண்டியது என்பதை விளங்கித் தலைவர்கள் செயற்படுவார்களேயானால் தமிழ் மக்களின் வாழ்வில் ஒளி பிறப்பது நிச்சயம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல