செவ்வாய், 16 நவம்பர், 2010

கணவருடன் தேனிலவைக் கழிக்க சென்ற மணமகள் கடத்தி, கற்பழித்து கொலை (படங்கள் இணைப்பு)

செல்வந்த பிரித்தானிய கணவருடன் தேனிலவைக் கழிக்க தென் ஆபிரிக்கா சென்ற பெண் ஒருவர், துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்டு பாலியல் வல்லுற வுக்குட்படுத்தப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான செய்தி திங்கட்கிழமை சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவதினம் கணவரான ஷரியன் தேவானியும் (31 வயது) மனைவியான அன்னி தேவானியும் (28 வயது) உணவகமொன்றில் உணவருந்திவிட்டு வாடகைக் காரில் புறப்பட்டுள்ளனர்.

இதன்போது, இரு துப்பாக்கிதாரிகள் காரை வழிமறித்து தடுத்து நிறுத்தினர்.

சாரதியை வெளியே தள்ளிவிட்டு காரை புது மணமக்களுடன் ஓட்டிச்சென்ற துப்பாக்கிதாரிகள், சுமார் 11 மைல் தூரம் சென்றதும் காலிருந்து ஷரியனை மட்டும் வெளியே தள்ளிவிட்டு காரை ஓட்டிச்சென்றனர்.

இந் நிலையில், ஷரியன் பொலிஸாரிடம் சென்று இது தொடர்பில் முறைப்பாடு செய்யவும் அன்னியை தேடி பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கேப் நகருக்கு அருகிலுள்ள கயெலிட்ஷா நகருக்கு இரு மைல் தொலைவில் கைவி டப்பட்டிருந்த காரொன்றின் பின் ஆசனத்தில் அன்னியின் இரத்தம் தோய்ந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அன்னி தலையில் தாக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அவரது உடலெங்கும் கீறல் காயங்களும் காணப்பட்டுள்ளன.

சுவீடனைச் சேர்ந்த உகண்டா ஆசிய வம்சாவளி இனத்தவரான அன்னி ஓர் இயந்திரப் பொறியியலாளர் ஆவார்.

அன்னியும் ஷிரெனும் இரு வாரங்களுக்கு முன் இந்தியாவில் மும்பாய் நகரின் புறநகர்ப் பகுதியிலுள்ள லேக் பவானி விடு முறை வாசஸ்தலத்தில் திருமணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

அன்னியின் கொடூரப் படுகொலை குறித்து தென் ஆபிரிக்க பொதுப் பாதுகாப்பு அமைச்சர் அல்பேர்ட் பிட்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல