செவ்வாய், 16 நவம்பர், 2010

ராமரின் புகழை மனமுருகிப் பாடிய பரூக் அப்துல்லா _ வியப்பில் ஆழ்ந்த பக்தர்கள்

உத்தர பிரதேச மாநிலத்தில் இந்து மத நிகழ்ச்சியின் போது மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா...

பக்தர்களுடன் சேர்ந்து ராமரின் புகழ் கூறும் பாடல்களை அற்புதமாக பாடி அசத்தினார். முஸ்லீம் மதத்தை சேர்ந்த அவர், இந்து மத பாடல்களை சிரத்தையுடன் பாடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

உத்தர பிரதேசத்தின் ராம்ஞீர் மாவட்டம் சாம்பால் நகரில் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ளுமாறு மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்றாலும் அவர்கள் அழைப்பை ஏற்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் இந்துக் கடவுள்களை போற்றி பாடல்கள் பாடப்பட்டன. இதில் ராமபிரானின் புகழைக் கூறும் பாடல்களை பக்தர்கள் மனமுருகி பாடிக் கொண்டிருந்தனர். அப்போது பரூக் அப்துல்லாவும் மனமுருகி பாடிக் கொண்டிருந்தார். பாடல்களை அடி பிறழாமல் அவர் பாடியதை கண்டு அங்கு கூடியிருந்தவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். முஸ்லீம் மதத்தை சேர்ந்த அவர் இந்து நிகழ்ச்சியில் பங்கேற்று ராமபிரானின் பாடல்களை பாடியது அவரது மத நல்லிணக்கத்தை காட்டியது என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தெரிவித்தனர். இதன் மூலம் அப்பகுதி மக்களின் மனதில் தனி ஒரு இடத்தை பிடித்து விட்டார் பரூக் அப்துல்லா.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல